பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பெருந்தகை மு. வ.

முயற்சிச் சிறப்பைக் காணலாம்; ஒழுக்கச் செல்வத்தைக் காண லாம்'-பக். 111.

‘தமிழ் மணமும் சைவ மணமும் யாழ்ப்பாணம் முழுதுமே கமழ்கின்றன'-பக். 112.

‘முயற்சித் திறனும் அறிவு வளமும் அவர்களுக்குத் தொன்று தொட்டுவந்த செல்வங்கள். இயற்கைவளம் குறைந்த புன்செய் நிலங்களும் மணல் திடல்களும் சூழ்ந்த நிலப்பகுதியில் வாழ்க்கையை நடத்த வேண்டியிருப்பதால் முயற்சியும் முற் போக்கும் அவர்களுக்கு இயல்பாக அமைந்திருக்கின்றன. இலங்கையின் மூளையே யாழ்ப்பாணத் தமிழர் என்று கூறத்தக்க நிலைமையை எங்கும் கண்டு மகிழலாம்'-பக். 115.

நாடுகாணச் சென்ற இடத்திலும் இயற்கையிலும் செயற் கையிலும் பழக்க வழக்கங்களிலும் மட்டும் தோய்ந்து விடாமல் தமிழ் இனத்தின் நல்வாழ்வில் நாட்டம் செலுத்தி ஆராய்கிறார் மு. வ. அவர்தம் தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழர் இனப்பற்று அத்தகையன.

உருசியப் பயணம் :

1962 ஆம் ஆண்டில் இந்திய அரசின் சார்பில் உருசிய நாட்டில் ஏற்பட்டுவரும் மாறுதல்கள், எழுத்தாளர் நிலை ஆகிய வற்றை ஆராய்வதற்குச் சென்றார். மூவர் சென்ற அக் குழுவில் தமிழகத்தின் சார்பில் மு. வ. சென்றார் ஆளுல் குடும்பத்த வரும், நெருங்கிய நண்பர் சிலருமே மு. வ. உருசியநாடு செல் வதை அறிந்தனர். ஒலி உண்டாகாமல் புறப்பட்டு அவ் வண்ணமே திரும்புவது மு. வ. வின் இயற்கை.

மு. வ. உருசிய நாட்டில் கண்டறிந்த செய்திகள் பலப்பல. அவற்றுள் சில :

‘முதலாவது உருசியர்கள் நல்ல உழைப்பாளிகள்; ஆண் பெண் இருவரும் அலுவலகங்கள் சென்று பணியாற்றுகிறார்கள்; கடுமையாக உழைக்கிறார்கள்; நூறு வயது நிரம்பிய ஒருவரும் தாம் வேலையில் இருந்து ஓய்வு பெற மறுக்கிறார். பெண்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/164&oldid=586239" இலிருந்து மீள்விக்கப்பட்டது