பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிநாட்டுச் செலவுகள் 153

வேலைக்குச் சென்றால் அவர்கள் பெற்ற குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளப் பள்ளிகள் உள. குழந்தைகளைப் பராமரித்துப் படிப் பும் சொல்லித்தரும் நிலையங்கள் அங்கு உண்டு. சில பள்ளி களில் மதிய நேரத்தில் பார்த்தால் வரிசையாக அமைந்துள்ள தொட்டில்களில் குழந்தைகள் அழகாகக் கண்ணுறக்கம் கொள் வதைக் காணலாம். அரசியலில் பெரும் பங்கு கொண்டவர் மனைவியும் எளிய வேலையை மேற்கொண்டு இருப்பதைக் காணலாம்.

‘அங்குத் தக்காளியும், உருளைக்கிழங்கும், பாலும், வெண் ணெயும் நிறையக் கிடைக்கின்றன. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் அந்நாட்டில் பயணம் செய்யும்பொழுது புலால் உணவு கொள்ள வேண்டிய தேவை இல்லை. அரசாங்கம் மக்கள் உண்ணும் ரொட்டியை இலவசமாகவே வழங்குகின்றது. தேநீருக்கு மட்டுமே காசுதரவேண்டும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் சேர்த்துள்ள பணத்திற்கு அங்கு மதிப்பில்லை. அந்தப் பணம் பயன்படுவதும் இல்லை. ஆடம்பரத்திலும் கேளிக்கை களிலும் அப் பணம் செலவிடப்பட அரசு அனுமதிப்பது இல்லை.”

“எழுத்தாளர்களுக்கென ஒரு பெரிய மாளிகை கடலுக்கு எதிரில் கட்டப்பட் டுள்ளது. அங்கு வார இறுதி விடுமுறையில் சென்று அமைதியாக இருந்து தம் எழுத்துகளைப் படைக்க லாம். எழுத்தாளர் தங்கித் தம் படைப்பில் ஈடுபடுவதற்கென்று சிறந்த வாய்ப்புகள் அம்மாளிகையில் செய்து தரப்பட்

டுள்ளன.’

மலேசியப் பயணம் :

டாக்டர் தனிநாயகம் அடிகளார் முயற்சியால் 1966ஆம் ஆண்டில் மலேசியாவில் முதலாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர். அவ் வூரிலே மாநாடு நடைபெற்றது. சென்னை அரசின் முதல்வர் திரு. எம். பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் அறிஞர் பலர் அம் மாநாட்டுக்குச் சென்றனர். மு.வ. மாநாட்டில் கலந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/165&oldid=586240" இலிருந்து மீள்விக்கப்பட்டது