பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பெருந்தகை மு. வ.

கொண்டு ஆங்கிலத்தில் ஓர் ஆய்வுக் கட்டுரை படித்தார். மலே சியாவிலும், சிங்கப்பூரிலும் விரிவாகப் பயணம் செய்தார். பல் வேறு இடங்களில் சொற்பொழிவாற்றினர்.

பாரிசுப் பயணம் :

1970ஆம் ஆண்டில் பாரிசு மாநகரில் மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டிற்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் மு.வ. சென்றார். The apostrophes in Tamil’ என்னும் தலைப்பில் கட்டுரை படித்தார். அங் கிருந்து இலண்டன் மாநகருக்குச் சென்று திரும்பினர்.

அமெரிக்கப் பயணம் :

1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் மு.வ. அமெரிக்காவுக் குச் சென்றார் துணைவேந்தர் பொறுப்பு ஏற்ற ஓராண்டின் பின்னர்ச் சென்ற செலவு இதுவாகும். இச் செலவின்போது அமெரிக்க நாட்டுப் பல்கலைக்கழகங்கள் பலவற்றைப் பார்வை யிட்டார். பல்கலைக் கழகப் பணிமுறைகள், கல்வித் திட்டங்கள், மாணவர் மனப்பான்மை முதலியவற்றை ஆராய்ந்தார். சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ முதலிய இடங்களுக்குச் சென்றார், அமெரிக்க நாட்டு ஊஸ்டர் கல்லூரி (College of wooster) டாக் டர் மு.வ. அவர்களுக்கு டி. லிட் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. திறமான புலமையெனில் வெளிநாடும் போற்றும் என்பதை மெய்ப்பித்தது.

ஊஸ்டர் கல்லூரி வழங்கிய பட்டம் வருமாறு : The Diploma makes known that

The College of Wooster in recognition of Distinguished Attainment has conferred upon

M. VARADARAJAN

The Degree of Doctor of Letters

and that he is entitled to all the honors, rights and privileges to that Degree appertaining.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/166&oldid=586241" இலிருந்து மீள்விக்கப்பட்டது