பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிநாட்டுச் செலவுகள் 155

Given in the City of Wooster, in the State of Ohio, United States of America, This nineteenth day of April, ir

the year of our Lord, One thousand nine hundred and seventy two.

In witness whereof the seal of the College and the signature of the President and the Dean are herewith affixed.

President Dean

அமெரிக்காவில் இருந்து திரும்பும் வழியில் சப்பான் நாட் டிற்குச் சென்று டோக்கியோ பல்கலைக் கழகத்தினைப் பார்வை யிட்டார். சப்பான் நாட்டு மக்களின் அயரா உழைப்பினைக் கண்டு வியந்தார். இரண்டாம் உலகப் போரில் பேரழிவிற்குள் ளான சப்பான்நாடு, அமெரிக்கநாட்டோடு தொழில் துறையி லும், வாணிகத் துறையிலும் போட்டி போட்டு விரைந்து முன் னேறி வருவதைக் கண்டார்.

எடின்பர்க்குப் பயணம் :

1973ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்களில் காமன்வெல்த் நாடுகளின் பல்கலைக்கழக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மு.வ. எடின்பர்க்கு சென்றார் ஆங்கு நடைபெற்ற ஆய்வில் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார். சீரிய கருத்துகளைத் தேர்ந்து சிந்தையில் தேக்கிக்கொண்டு பயன்படுத்த விழைவது மு. வ. வின் கடைப்பிடியாகும். அதற்கு இம் மாநாடும் விருந் தாக அமைந்தது.

இந்திய நாட்டுச் செலவு:

இந்திய நாட்டினுள் நடைபெற்ற பல்வேறு பல்கலைக் கழகக் கருத்தரங்குகளிலும் மு. வ. கலந்து கொண்டார். அவற்றுள் டெல்லி, ஆக்ரா, மைசூர், சிவாசி முதலிய பல்கலைக் கழகங்கள் குறிப்பிடத் தக்கனவாம். மைசூர் மாநிலத் தார்வார் பல்கலைக் கழகக் கருத்தரங்கில் கலந்து கொள்ளச் சென்ற பொழுதில் மு. வ. தமக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளராகிய காண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/167&oldid=586242" இலிருந்து மீள்விக்கப்பட்டது