பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷56 பெருந்தகை மு. வ.

கரைக் கண்டு களிப்புற்றாள். அச் செய்தியைக் கலைமகள் இதழில் ஒரு கட்டுரையாக எழுதினர்.

நாட்குறிப்பு எழுதும் நல்ல வழக்கம் உடையவர் மு. வ. நாட்குறிப்புகளை நாவலில் இடம் பெறச் செய்யும் முறையை அல்லி என்னும் நாவலில் கண்டுள்ளோம். மு. வ வின் நாட் குறிப்புகள் பயன் மிக்கவை. உண்டது, உடுத்தது, உறைந்தது பற்றிய குறிப்புகளை வாளா எழுதிச் செல்வது அன்று. வரலாற்றுக் குறிப்புகளும், பண்பாட்டுக் குறிப்புகளும், இயற்கை எழில்களும், மனப் போக்குகளும், மொழி நலங்களும் ஒருங்கே முகிழ்த்து விளங்குவது மு. வ. வின் நாட்குறிப்பு ஆகும்.

சான்றாக 1970 ஆம் ஆண்டு பாரிசு மாநகருக்குச் சென்ற போது மு. வ. எழுதிய நாட்குறிப்பில் சில பக்கங்களைக் காண் போம்:

நாட்குறிப்பு :

10-7-70 பாரிஸ் பயணம் இரவு 10-55 க்குப் பம்பாயில் இருந்து 12-30 கராச்சி. கோஷா இல்லா நிலை. பிறகு 2-30 Teheran–ucsssfi 9;uq.#siq. loir psü 3-20 Bierut. Teheran Air Port அழகு-மசூதிமாடல். Exchange 54 & பம்பாய் 8 டாலர். பீருட்-5 டாலர் = 16.

பிச்சைக்காரர் குறைவு-குடிசை சில-பல அடுக்கு மாளிகைகள்- புதியன-அழகியன. ; மி.லியன் மக்கள் தொகை-1955க்குப் பிறகு பதின் மடங்கு-19 நாடுகள் அடிமைப் படுத்தின-எகிப்து, கிரேக், ரோம் ect, கடைசியில் லெபனுன் உரிமை. அரபி மொழி-கார் plate ect.

11-7-70 பீருட்-லெபனுன் நகர்-பெல்பாக விழா-இறுதி

நாள் பிப்ளியோஸ்-பழைய அரங்கு, புதைபொருள், புதை சவக்குழி, புதை கட்டம், கல்சட்டி பானே.

பழைய Wenus Arrounds காதல் முதலியன. கடலினுள் துழைதரையில் கி. மு. 6000 நகர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/168&oldid=586243" இலிருந்து மீள்விக்கப்பட்டது