பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 5

அவர்களின் வாழ்வு. சிற்றுாரில் பிறந்தவரும் பேரூரும் விழா வெடுத்துப் போற்றும் பெருநிலைக்கு வளர முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டான வாழ்வு மு. வ. அவர்களின் வாழ்வு. உயர்நிலைப் பள்ளிப் படிப்புடன் தம் பள்ளிப் படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்துக் கொண்டவரும் தாமே முயன்று கற்றுப் பலப்பல உயர்நிலைப் ப்ட்டங்களையும், மேம்படு பதவிகளையும் பாராட்டுதல் களையும் பெறமுடியும் என்பதற்கு எடுத்துக் காட்டான வாழ்வு மு. வி. அவர்களின் வாழ்வு. சுருங்கக் கூறில்ை இளைஞர்கள் பின்பற்றிப் பெருவாழ்வு கொள்ளத்தக்க எடுத்துக்காட்டான வாழ்வு மு. வ. அவர்களின் வாழ்வு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/17&oldid=586245" இலிருந்து மீள்விக்கப்பட்டது