பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பெருந்தகை மு. வ.

கடிதங்கள் எழுதினர். தாயுமானவர் பாடல்களையும், இராம தீர்த்தர் பொன் மொழிகளையும் மு. வ. கேட்குமாறு செய்தார். மு. வ. இரவெல்லாம் உறங்கினர் அல்லர்.

உடல் நன்றாக வியர்த்தது; துண்டால் துடைத்துக் கொண்டே இருக்க நேர்ந்தது. 9-10-74 காலை 4 மணிக்கு மு. வ. தம் மனைவியையும் மக்களையும் அழைத்தார். தாம் கடைப் பிடித்து வந்த இயற்கை மருத்துவம் தம்மைக் கைவிட்டு விட்டது என்றார் மேலும் ‘நேற்று மட்டும் நான்கு முறை என் மருத்துவத்தைப் பயன்படுத்திப் பார்த்தேன். அது பயன் அளித் திருக்குமேயானல் எனக்கு நன்றாக உறக்கம் வந்திருக்கும். மாருக நான் உறங்கவே இல்லை’ என்றார் ஆயினும் மனம் தளராமல் இருந்தார்.

டாக்டர் நம்பி ஒரு மாத்திரையைக் கொண்டுவந்து மு. வ. வின் வாயில் போட்டார். உடனே வாந்தி வந்துவிட்டது. என் வாழ்வில் நீண்ட காலமாக வாந்தி என்பதே இல்லை. இளமை யில் சிலமுறை கண்டிருக்கிறேன். இப்பொழுது நான் வாந்தி எடுத்தது என் உடம்பு என் வசம் இல்லை என்பதைக் காட்டு

கிறது’ என்று கூறிஞர் மு. வ.

மு. வ. வைப் பார்ப்பதற்காக டாக்டர் கோரத் மதுரையில் இருந்து வானூர்தி வழியே வந்தார். டாக்டர் இராமச் சந்திராவும் வந்தார். அவர்கள் இருவரும் உடலை ஆய்ந்து பார்த்து, ‘உடனே மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்’ என முடிவு செய்தனர்.

மதுரைப் பல்கலைக் கழகப் பதிவாளருக்கு Hereafter send no files until further orders’ storg), 4 logie stop 5 soles & sólso சேர்க்கச் செய்து, மருத்துவமனைக்குச் செல்ல ஒருப்பட்டார். மற்றவர்களின் மன அமைதிக்காக இறுதிப் பொழுதில் தந்த இசைவே இஃதாகும். அவர்மனம் சற்றும் இடம் தரவில்லை.

தாமே மருத்துவமனை வண்டியில் உள்ள படுக்கையில் படுத் தார்; கண்ணிர் வழிந்தது. தம் கொள்கைக்கு மாருன செயல் நடைபெறுவதை எண்ணிக் கண்ணிர் வடித்ததாக நம்பி உணர்ந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/178&oldid=586255" இலிருந்து மீள்விக்கப்பட்டது