பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் பிரிவு 16ሽ

தார். வீட்டுக்குத் திரும்பி விடலாமா எனவும் கருதினர். போராட்டமான உள்ளத்துடன் மு. வ. மருத்துவமனையில் சேர்க்கப் பெற்றார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் முன்னின்று ஏற்பாடுகளைக் கண்காணித் தார். கல்வியமைச்சர் டாக்டர் நாவலர் வந்து பார்த்தார். ஊசிபோட்டுக் கொள்ளாத அவர் உடலில் ஊசி போட்டதால் முன்கையில் குருதி கொட்டியது. ‘அரசு இந்த மருத்துவத்தை உன் மேற்பார்வையில் வீட்டிலேயே பார்த்துக்கொள்ள முடியாதா?’ என்றார். திருப்பதிப் பல்கலைக் கழகத் தமிழ் விரி வுரையாளர் திரு. பொன். செளரிராசன் வந்தார். அவரிடம் (ք. 6ն.

வான நாடரும் அறியொ ணுதநீ

மறையி லீறுமுன் தொடரொ தை நீ

ஏனே நாடரும் தெரியொ ணுதநீ

என்னே யின்னிதாய் ஆண்டு கொண்டவா

ஊனே நாடகம் ஆடு வித்தவா

உருகி நான்உனைப் பருக வைத்தவா

ஞான நாடகம் ஆடு வித்தவா

நைய வையகத் துடைய விச்சையே’

என்னும் திருவாசகப் பாடலையும் (திருச்சதகம் 95),

ஆடலையே காட்டியெம தாடலொழித் தாண்டான்பொற்

ருடலைமேற் குடித் தழைக்குநாள் எந்நாளோ?

என்னும் தாயுமானவர் பாடலையும் (எந்நாட் கண்ணி 14 22) பாடினர்.

சென்னை பொது மருத்துவமனை மருத்துவர்கள் பலவகை யாலும் ஆய்ந்து தக்க மருத்துவம் மேற்கொண்டனர். வேலூர் மருத்துவமனை மருத்துவர்களுடன் தொடர்பு கொண்டனர். அதன் பின் ஒரு முடிவுக்கு வந்து பேஸ் மேக்கர் (Pace maker) என்னும் கருவியினை அவர் மார்பில் வைத்தனர். அதற்கு முன்னே மயக்கம் தந்தனர். மு. வ. வுக்கு மயக்கம் வருவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/179&oldid=586256" இலிருந்து மீள்விக்கப்பட்டது