பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பெருந்தகை மு. வ.

முன்னர், ‘மருத்துவர்களே, உங்களுடைய அயராத அரும் பணியினை நீண்ட நேரமாகக் கவனித்து வருகிறேன்’ என்று கூறியதே இறுதிச் சொல்லாகும்.

மு. வ. வின் நாடித் துடிப்பு இயல்பான நிலைக்குத் திரும் பியது. அனைவரும் மகிழ்ந்தனர். மகிழ்ச்சியோடு அன்பர்களும் புதல்வர்களும் வீட்டுக்குத் திரும்பினர். ஆளுல், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. போனவர்கள் விரைந்து திரும்ப நேர்ந்தது. மு. வ. வின் உடல்நிலை சரிப்படுத்த முடியாத அளவுக்குப் போய் விட்டது. மாலை 3-30 மணி அளவில் (10-10-74) அவர் நல்லுயிர் அமைதியுற்றது !

மு.வ. வின் உடல் மாலை 6-30 மணிக்கு வீட்டுக்குக் கொண்டு வரப்பெற்றது. மனைவி, மக்கள், உற்றார், உறவினர், அன்பர், நண்பர் திரள் திரளாக வந்து கதறிக் கண்ணிர் வடித்தனர். மாணவ மாணவியர் வெள்ளமெனத் திரண்டு வந்தனர். வெளி யிடங்களில் இருந்தும் ஆர்வலர்கள் வந்து குவிந்தனர். தமிழக ஆளுநர், முதல்வர் அமைச்சர்கள் பல்வேறு கட்சித் தலைவர்கள் வந்து இரங்கல் தெரிவித்தனர். மாலைகள் மலையெனக் குவிந் தன.

மறுநாள் மாலை 5 மணிக்கு மு.வ. வின் உடல் நன்கு அழகு செய்யப்பெற்ற இராணுவ வண்டியில் கிடத்தப்பெற்று அரும்பாக் கம் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்லப் பெற்றது. சாலையின் இரு பாலும் மக்கள் நின்று தம் இறுதிவணக்கத்தைத் தெரிவித்தனர். கிடைத்த கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு மதுரைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களும் அலுவலர்களும் மிகுதியான அளவில் வந்து சேர்ந்தனர். விம்மல்களுக்கும் தேம்பல்களுக்கும் இடையே முயற்சிக்கு ஒருவர் இவரே என எடுத்துக்காட்டாக வாழ்ந்த பண்பாளர் மு.வ. வின் திருவுடலம் மைந்தர் நம்பியினல் எரியூட்டப் பெற்றது. இருள் கப்பிக் கொண்டு வந்த பொழுதிலே அந்த ஒளி, சுடர்விடத் தொடங் கியது. அகல் விளக்காக வாழ்வைத் தொடங்கிக் கலங்கரை

1. அங்க (க் குடும்ப) விளக்கு அனேவதற்கு முன்னே ஒருமுறை அழகாக ஒளி வீசியது -கள்ளோ? காவியமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/180&oldid=586258" இலிருந்து மீள்விக்கப்பட்டது