பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் பிரிவு 169

விளக்காக வாழ்ந்த மு.வ. குன்றின்மேல் நின்ற ஒளியாக, விண் ணின்மேல் எழுந்த முழுமதியாக ஒளியுருக் கொண்டார்.

‘அந்த மலர்கள் என்ளுேடுபேசுவனபோல் இருக்கின்றன. அவைகள் அப்படியே இருக்கட்டும். வாழ்க்கையைப் பற்றி அவைகள் என்னவோ சொல்கின்றன. உணர்த்துகின்றன. இருக்கட்டும்’

-வாடாமலர்

‘நீதான் நேராகச் சுடர்விட்டு அமைதியாக எரியும் ஒளி

விளக்கு’

-அகல்விளக்கு

‘என் வாழ்க்கை சமுதாயத்திற்கு உரிமையானது. ஆகவே சமுதாயத்திற்கு இயன்ற அளவு உழைப்பதே என் கடமை’ என்றும், ‘உயிர் உள்ளவரையில் உழைத்துச் சாக விரும்பு கிறேன். உழைக்க உழைக்கத்தான் எனக்கு உயிர்வாழ்வு இனிக்கிறது’ என்றும் வாழ்ந்த வாழ்வு அமைதியாய் முடிந் தது...இனி அந்த ஒளியை அவருடைய பற்பல நூல்களும்

மங்காமல் பரப்பி வரும் என்பது திண்ணம்’

-அறிஞர் பெர்னுட்சா

___ _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/181&oldid=586259" இலிருந்து மீள்விக்கப்பட்டது