பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின் னிணைப்பு

கடித இலக்கியம்

உதவி வேண்டில்

ஒம்

மு. வரதராசன் வேலம் 29–5–43

அன்புடையீர்,

வணக்கம். நலம். கடிதம் வந்தது. அதற்குள் ரேடியோ’ அறிக்கையும் இருந்தது. அதற்குமுன் திருமண அழைப்பும் சேர்ந்தது. நன்றி.

தமிழில் எழுதுகின்றேன்; மன்னிக்க.

மழை பெருமழை; ஏரிகள் பல உடைந்தன; உழவர் எண்ணங்களும் உடைந்தன.

அரசு முதலானேர் நலமே. செல்வன் பார்த்தசாரதி உடல்நலம்பற்றிக் கவனித்துக் கொள்ளுங்கள்.

எப்படியாவது சேத்துப்பட்டில் வீடு தேடியுதவுமாறு கோருகின்றேன். தனியே இருக்கவே விருப்பம். மறுபடியும் அந்த வீட்டுக்காரரைக் கேளுங்கள். வேறு வீடு கிடைத்தாலும் பாருங்கள். ரூ 15 முதல் 20 வரைக்கும் கொடுப்பதானுலும் சரி. நண்பர் திரு. துரையரங்களுர்க்குத் தேவையில்லையாளுல் ‘டிரைவர் வீட்டை எனக்காகப் பேசுங்கள். (அதாவது தங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு பகுதி). எதுவுமில்லையானல், இறுதியில் 16-6-43 போல எனக்கு எழுதினுல் நான் உடனே சென்னை சென்று பழைய வீட்டைப் பேசி முடிப்பேன். என் பொருட்டுத் தாங்களும் தாயாரும் அன்புடன் செய்யும் முயற்சிக்கு வீடுதேடும் வேலைக்கு - யான் மிகவும் நன்றியுடையேன்.

பிற பின்னர்.

அன்புள்ள, திரு. வீ. பாஷ்யராமானுசம். (ஓ - ம்) மு. வரதராசன்

அவர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/182&oldid=586260" இலிருந்து மீள்விக்கப்பட்டது