பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 고 73:

கலை விழாவில் எல்லோரும் போகலாம். டிக்கட் ரூ. 15 வாங்க ஏற்பாடு செய்வேன். உள்ள வசதிகளைக் கவலை இல்லாமல் பகிர்ந்து கொள்வோம். தவருமல் வந்தருள்க.

அன்புள்ள, (ஒ - ம்) மு. வரதராசன். திரு. மா. அ.

மாணவர்க்கு உதவி

4ーリーIg65 அன்புள்ள திரு. சி. பா;

நலம். இக் கடிதம் கொண்டுவரும் இளைஞர் திரு. A. P. காசி லிங்கம் (P. U. C. I. Group) சென்னை க்குப் புதியவர். பச்சை யப்பன் விடுதியில் சேர்க்கப் பட்டுள்ளார். புதியவராகையால் இவர்க்கு நல்ல மாணவரைக் கண்டு அறிமுகப் படுத்தி, பார்க்கும் போது உசாவி, உதவிபுரிக. நன்றி.

அன்புள்ள,

மு. வரதராசன் திரு. சி. பாலசுப்பிரமணியன்.

குடும்பப் பொலிவு

மதுரை_3, 8–3–71

அன்புள்ள திரு. சி. பா.,

நலம். மனைவியும் மக்களும் நலந்தானே? - இங்கு நாங்கள் இருவரும் நலம். அரசு குடும்பம் நேற்று. வந்து சேர்ந்துள்ளனர். வீடு பொலிவாக உள்ளது.

செய்திகள் எல்லாம் அறிந்து வருகிறேன். பணிகள் நன்றாக உள்ளன; எளிமையாகவும் உள்ளன. நல்ல ஒத் துழைப்பும் உள்ளது.

அன்புள்ள, மு. வ. திரு. சி. பாலசுப்பிரமணியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/185&oldid=586264" இலிருந்து மீள்விக்கப்பட்டது