பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பெருந்தகை மு. வ.

புகழ்ச்சி விரும்பாமை

மதுரை-635031 7–1–74 அன்புள்ள திரு. சி. பா.,

நலம். எங்கும் என்னைப் புகழ்ந்து பேசல் வேண்டா. அது சிலர்க்கு எரிச்சல் புகைச்சலை விளைக்கிறது. மூலையில் ஒடுங்கி யிருந்து மறைதலே ஆத்திகர் கடமை.

மு. வ. திரு. சி. பாலசுப்பிரமணியன்.

விட்டுக் கொடுத்தல்

30—1–74. அன்புள்ள திரு. சி. பாக

நலம். இங்கு நெருக்கடி மிகுந்தது; வேறு வழியின்றிக் கடைசியில் உடன்பட்டேன். என் திட்டத்திற்குப் பெரிய இடையூறுதான். என்ன செய்வது?

அன்புள்ள, மு. வரதராசன் திரு. சி. பாலசுப்பிரமணியன்.

புதியபாதை

அன்புள்ள திரு. இரா. த.

அறுபதாம் ஆண்டு நிறைவு விழா, மலர் இவை கொண் டாடக் கூடாது. இவ்வளவு காலம் என்னுடன் நெருங்கிப் பழகிய பழைய மாணவர்களே என் உள்ளத்தை உணர முடியா மல் இருக்கிறார்களே, மற்றவர்களைப் போலவே கண்மூடி நடக்க விரும்புகிறார்களே என்று நினைத்து வருந்துகிறேன். ஒரு சிலரையும் முற்போக்காக, துணிவாகப் புதிய பாதையை நோக்கச் செய்ய முடியாமற் போனதால் என் வாழ்க்கை ஒரு வகையில் தோல்விதான். முயற்சி விடுக.

அன்புள்ள,

திரு. இரா. தண்டாயுதம். மு. வரதராசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/186&oldid=586265" இலிருந்து மீள்விக்கப்பட்டது