பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பெருந்தகை மு. வ.

யாட்டாகும். இவை தவிர்க்க முடியாதவை. அறியாமையைப் படைத்தான் நம் தலைவன்; ஆசையையும் உணர்ச்சிகளையும் படைத்தான். விதைக்கச் செய்கிருன்; விளையச் செய்கிருன்; நுகர்வோம். நுகரவும் செய்தலால் அவன் விளையாடல் நடை பெறுவதாக.

அம்மா வருவார்கள் என்றே நம்புகிறேன். வயது, தளர்ச்சி, ஏமாற்றம்-என்ன செய்வது? மனைவி இல்லாத நேரத்தில் உன் அன்பைச் செலுத்துக. நமக்கு ஒர் உயிரின் அன்பு உண்டு என்று நம்பச் செய்க. அந்த நம்பிக்கை உள்ளவரையிலுமே வாழ்வு. மனைவியையும் சொல்லால் கடிய வேண்டா. பேசா திருக்கும் கடுமையும் வேண்டா தானே உணர்ந்து திருந்த முடியுமா எனப் பொறுத்திரு. திருந்தா விட்டால் கவலை வேண்டா. நம் பங்கு வாழ்க்கையை நன்கு உணரும் வாய்ப்பு என எதையும் ஏற்க கவிதைகள் எழுதுக. அனுபவம் எழுத்தில் வடிந்து போகட்டும்.

அன்புள்ள, திரு. பி. செளரிராசன். மு. வரதராசன் மு. வரதராஜன், வித்வான் பி. ஒ. எல்., தமிழ்ப் பண்டிதர்,

7–7–’39

திருப்பத்தார், (வட ஆற்காடு) அன்புடையீர்!

தங்கள் செல்வி இரண்டும் பெற்றேன்; 1-7-39 ல் எழுதிய கடிதமும் பெற்றேன்.

செல்வி'க்கு ஆற்றுந் தொண்டு சிறந்த தமிழ்த் தொண் டாகும் என்பதை நன்கு அறிவேன்; ஆதலின், இயன்றவரை முயன்று உறுப்பினரைச் சேர்த்தனுப்புவேன்.

உளனும் உறக்கமும் என்னும் தலைப்பமைந்த கட்டுரை ஒன்று வரும். செல்வி இடந்தருமேல், கொள்ளுங்கள்.

இங்ஙனம், தங்களன்புள்ள, (ஒ - ம்) மு. வரதராஜன்

திரு. வ. சுப்பையாபிள்ளை, சென்னை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/188&oldid=586267" இலிருந்து மீள்விக்கப்பட்டது