பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 177

சென்னே 23–9–39

அன்புமிக்க ஐய !

வணக்கம். நலம்.

தங்கள் கடிதம் கிடைத்தது. ஒய்வின்மையால் மறுமொழி வரையத் தாழ்த்தது. சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் 25-9 - 39 முதல் தொழிலேற்றுள்ளேன். குழந்தைப் பாட்டுக் களைக் குறித்து முயலுதற்கு நேரமின்மையால், இன்னும் ஒரு வாரம் பொறுக்குமாறு வேண்டுகின்றேன். தங்களை நேரிற் காண முயல்வேன்.

இங்ஙனம், தங்களன்புள்ள,

(ஒ - ம்) மு. வரதராஜன்

திரு. வ. சுப்பையாபிள்ளை, சென்னை.

மு. வரதராஜன், வித்வான் பி. ஒ. எல், தமிழ்ப் பண்டிதர் திருப்பத்துார், (வட ஆற்காடு.)

30–8–39 அன்புமிக்க ஐய !

வணக்கம். தங்கள் கடிதமும், சில பாட்டுக்களும் வந்து சேர்ந்தன. நேற்று, அப் பாட்டுக்களையும், யான் பாடிய எட்டுப் பாட்டுக்களையும், செல்விக்குரிய கட்டுரையையும் சேர்த்து அனுப்பினேன். இன்று குழந்தைப் பாட்டுக்கள் பதினெட்டு அடங்கிய கையெழுத்துப் படியும், எனது உருவப்பட மொன்றும், அனுப்பியுள்ளேன். வந்து சேர்ந்தமை குறித்து அறிவிக்குமாறு வேண்டுகிறேன்.

இப்போது உடல் நலமாக உள்ளது. ஒய்வு கிடைத்த போதெல்லாம். ஏதேனும் எழுத முயல்வேன். கட்டுரைகள் எழுதி வருகிறேன். முடிந்தபின் அனுப்ப எண்ணியுள்ளேன். தங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.

இப்போது பாடி அனுப்பியுள்ள 26 குழந்தைப் பாட்டுக் களைக் குறித்தும் தங்கள் கருத்தை அறிவியுங்கள். தாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/189&oldid=586268" இலிருந்து மீள்விக்கப்பட்டது