பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பெருந்தகை மு. வ.

‘வேலம் என்று என் சொந்த ஊரை அவர் சொன்ன வுடன் எனக்குத் திடுக்கிட்டாற்போல் ஆனது. எந்தத் தெரு? . எந்த வீடு? என்று கேட்கலாமா என்று வாயெடுத்தேன். அதற்குள், “உனக்கு அந்த ஊர் தெரியுமா?’ என்று அவர் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று எண்ணிப் பேசாமல் இருந்தேன். ‘அது நல்ல ஊர் தானே? நீங்கள் ஏன் விட்டு விட்டு வந்தீர்கள்?’ என்றேன்.

‘ஊர் நல்ல ஊர்தான். வீடு நல்ல வீடு அன்று’ என்றார். *

வேலம் மு. வ. அவர்களைத் தாங்கியிருந்த மண் என்பது மட்டும் அல்லாமல், அவர்கள் ஆராய்ச்சிக்கும் இயற்கைப் பற்றுக்கும், எளிமை போற்றலுக்கும் கருத்தாங்கி நின்ற இடமு மாகும.

அகநானூற்றின் ஒன்பதாவது பாடலின் விளக்கம் மு. வ. அவர்களின் அறிவு நுட்பத்தினல் ஏறத்தாழ இருநூறு பக்கங் கொண்ட நூலாக விரிந்துள்ளது. இவ் வாராய்ச்சி விளக்கத் +) திற்கு இடமாக இருந்தது வேலத்துச் சிற்றாேடைச் சூழலே 瞿山厂山D。

தமிழகத்து வறண்ட சிற்றாேடையும் வண்டமிழ் வளர்க்கும் என்பதற்கு வேலத்துச் சிற்றாேடை ஒரு சீரிய சான்றாம்.

“ஒருபாட்டு; அதைக் குறித்துப் பலநாள் போராட்டம்; இரண்டுநாள் இரவும் பகலும் ஏக்கம்; மூன்றாம் நாள் மாலையில் வேலத்து மலையை அடுத்து அழகிய ஓடையில் உலவும்போது எதிர்பாராத விளக்கம்; நல்ல தெளிவால் பிறந்த பேருவகை - இவைகளே இந் நூலாக உருப்பெற்றன.’

ஒவச் செய்தி மட்டுமே அல்லாமல் தமிழகம் எத்துணையோ உவகைச் செய்திகளைக் கொள்வதற்கு இடமாக இருந்ததும் வேலத்துச் சூழல் ஆகும்.

‘ஊர்க்கு மேற்கே காட்டில் இன்னொரு பெரிய குளம் : உள்ளது. அதன் நீர் தெளிவானது. (இப்போது கெடுத்து

-- -

1. குறட்டை ஒலி. (இறந்த சிற்றப்பா) 2. ஒவச் செய்தி. நன்றியுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/22&oldid=586277" இலிருந்து மீள்விக்கப்பட்டது