பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷生 பெருந்தகை மு. வ.

தந்தையர் நாடு என்ற பேச்சினிலே, ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே’ என்ற உணர்வுதான் அப்போது மேலிட்டது : ‘

முனிசாமி முதலியார் :

மு. வ. அவர்களின் பெரிய பாட்டனர் வரதராச முதலியார், ‘படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் பான்மையர். ‘அஞ்சல் என்ற சொல்லும் அடையா நெடுங் கதவும்: உடையவர். அவர் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை. அவர் ஒரு வழக்கில் ஒரு தீர்ப்பு வழங்கிவிட்டால் அதற்கு மேல் முறையீடே g6ుడి). அவ்வளவு செல்வாக்குடையவர். சுற்றத்தாற் சுற்றப் பட ஒழுகிய அவர்தம் மாண்பு, குடும்பச் சொத்தாக அமைந் தது. அவர்தம் இளவலார் ஆகிய சபாபதி முதலியாரும் அத் தன்மையராகவே விளங்கினர். அவர்தம் திருமகளுராகத் தோன்றியவர், மு.வ. அவர்களின் தந்தையார் ஆகிய முனிசாமி முதலியார் ஆவர். -

சபாபதி முதலியார்க்கு மனைவியர் இருவர் வாய்த்தனர். அவருள் மூத்த மனைவியார் திருவயிற்றிலே தோன்றியவர் முனிசாமி முதலியார். இளைய மனைவியார் மணிவயிற்றில் பிறந்தவர் முத்துசாமி முதலியார். இவர் சிறந்த கலைஞராக விளங்கியவர். இவரிடத்து மு. வ. அவர்களுக்கு இணையற்ற அன்பு உண்டு. சித்தப்பா சித்தப்பா’ என்று அன்பு பெருக ஆர்வம் மீதுார அழைத்து மகிழ்வார். இவர்தம் மகளுரும் இப் பொழுது இசைக் கலைஞராகத் திகழ்கிறார்,

தந்தையார் தமிழறிவு :

முனிசாமி முதலியார் கூரிய அறிவு வாய்ந்தவர்; கணக்கில் தேர்ச்சி மிக்கவர்; ஆளுல், தமிழறிவு வாய்க்காதவர். அதற்கு அவர் வாழ்ந்த காலமும் இடமும் காரணமாக அமைந்தன.

அந் நாளில் தெலுங்குமொழிப் பயிற்சி அப் பகுதியில் வாணிகத்திற்குப் பயன்பட்டது. அதற்கெனத் தமிழ்நாட்டில் தெலுங்குப் பள்ளிகளும் இருந்தன. அவர் தெலுங்குப் பள்ளியில் பயின்றார். தமிழ்மொழிப் பயிற்சி பெறுதற்கு வாய்ப்பு இல்லாமல் போயினர். முத்தமிழுக்கு மு. வ. என்று பாராட்டப் பெறுதற்

1. எங்கள் ஊர்-வேலம். (ஆனந்த விகடன் : 3-8 ‘69.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/26&oldid=586284" இலிருந்து மீள்விக்கப்பட்டது