பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்ஞேர்கள் 15

குரிய பெருமகளுரின் தந்தையார், தமிழறிவு வாய்க் காதவராக இருந்தது பெரு விந்தையே! அவர் எழுதும் கடிதங்களைக் கண்டு மு. வ. அவர்களின் உள்ளம் கலங்கியதும், கனிவோடு உருகியதும் உண்டு. மொழிப்பற்று’ என்னும் நூலிலே இதனை வெளிப்படுத்துகிறார். (பக். 4-8).

‘எனக்கு ஒரு பெரிய குறை உண்டு. நான் வெளியூர்க்குச் சென்ற பிறகு அவர் எழுதிய கடிதங்களைப் படிக்கும் போதெல் லாம், என் தந்தையாரைப்போல் தமிழ்க் கொலை செய்கின்றவர் எவரும் இல்லை என்று எண்ணி வருந்துவேன். ரும சாமி, நண்ராக, இருக்கிரார்கள், வன்து போறார். எண்று சொண்ளுர்: என்றெல்லாம் அவர் கடிதங் களில் எழுதியவற்றைக் கண்டு ஆத்திரம் கொள்வேன். ‘அந்தக் காலத்துப் படிப்பு அவ்வளவு தான் போலும்’ என்று ஒருவாறு ஆத்திரம் அடங்குவேன்’.

மு. வ. வின் அன்னையார் :

முனிசாமி முதலியார் வேலூரில் இருந்த உறவினர் ஒருவரின் மகளாரை மணந்தார். அம் மனைவியார் ஒரு மகளையும் பெற்றார், பின்னர், விரைவில் இறந்து போனார். குழந்தையும் இறந்து போனது. இந் நிலையில் முனிசாமி முதலியார் காவேரிப் பாக்கத்தைச் சேர்ந்த சேரி என்னும் ஊரில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மனைவியார் ‘அம்மா க் கண்ணு’ என் பார். அவர்தம் அன்னையார் ‘நரசம்மாள்’ என் பார். மகளை வேலத்து முனிசாமி முதலி யார்க்கு மணம் செய்வித்ததுடன், தாமும் தம் மகளாருடன் வேலத்துக்கே வந்து சேர்ந்தார் நரசம்மாள்.

நரசம்மாள் நல்லியல்புகள் வாய்ந் தவர். அவர் நல்லியல்புகள் அனைத்தும் அம்மாக் கண்ணுவினிடம் விளங்கின. அம்மாக்கண்ணு குடும்பத்திற்கு ஏற்ற குல மகளாகக் காட்சி வழங்கினர். உற்ாரர் உறவினர் பாராட்டும் சீருடன் சிறந்தார். கணக்கு வைப்பதிலும் கட்டு திட்டமாகக் குடும்பம் நடத்து வதிலும் எடுத்துக் காட்டாக இலங்கினர். ‘இல்லதென் இல்லவள் மாண்ானுல்’ என்னும் பொன்மொ க்ழிகு ஏற்ப, நிறைந்த இல்ல பாக் ெ இன்புற்றார். ‘மனைக்கு விளக்கம்

மடவார்’ என்பதை மெய்ப்பித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/27&oldid=586285" இலிருந்து மீள்விக்கப்பட்டது