பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பெருந்தகை மு. வ.

மக்கள் :

முனிசாமி முதலியார் அம்மாக் கண்ணு அம்மையார் ஆகிய இவர்களின் இனிய இல்வாழ்வின் பயணுக மக்கள் அறுவர் தோன்றினர். அவர்களுள் ஆடவர் இருவர்; மகளிர் நால்வர்; முதன் மகள் கண்ணம்மாள் என்பார். இவர் பதினெட்டு வயதே வாழ்ந்தார். இவரே மு. வ. என்னும் குழந்தையை மடியில் கிடத்தியும், இடையில் இருத்தியும், தோளில் சுமந்தும் வளர்த்த பேறுடையார். இவர், குழந்தை மு. வ. வின் மேல் காட்டிய அன்பிற்கு அளவில்லை. மு. வ. வும் இத் தமக்கை யிடத்துக் கொண்டிருந்த அன்புக்கோர் எல்லையில்லை. கண்ணம்மாள் இறந்தபோது மு. வ. வுக்கு வயது எட்டே ஆகும். அப்பொழுது இடுகாடு வரை அழுது கொண்டே சென்றாராம் மு. வ.

கண்ணம்மாளை அடுத்துப் பிறந்தவர் இராசம்மாள் என் பார். இவர் மு. வ. வுக்கு ஐந்து வயது மூத்தவர். அம் மூரில் வாழ்ந்து கொண்டிருப்பவர். ‘இளம் வயதில் என் தம்பி பேளுவைக் கையில் பிடித்தவன்; இறுதி வரையில் பேனவைக் கீழே வைக்கவில்லை’ என்று தம் அருமைத் தம்பியை எண்ணி எண்ணிக் கண்கலங்கி நிற்பவர்.

இராசம்மாளை அடுத்து மூன்றாம் மகவாகப் பிறந்தவரே மு. வ. என்னும் வரதராசனர். பெண்களே நிறைந்திருந்த குடும்பத்தில் ஓர் ஆண் மகவாகத் தோன்றினர். இவருக்குப் பின்னர் ப் பிறந்தவர் பழனிச்சாமி. அவரும் தம் பதின்ைகாம் வயதில் இயற்கை எய்தினர். அவருக்குப் பின் பிறந்த காவேரி என்னும் பெண்மகளாரும் பன்னிரண்டாம் அகவையளவில் மறைந்தார். கடைக்குட்டியாகப் பிறந்தவர் கமலாம்பாள். அவர் தம் தமக்கையார் இராசம்மாளைப் போலவே அம்மூரில் மனம் செய்துகொண்டு வாழ்கிறார். இனி வரலாற்றுத் தலைவர் மு. வ. அவர்களின் பிறப்பு-வளர்ப்புகளில் கருத்துச் செலுத்து

வோம்.

“جنگی

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/28&oldid=586286" இலிருந்து மீள்விக்கப்பட்டது