பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையும் கல்வியும் 23

வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தார். சமய நூல்களை யும் கற்பித் தார். ‘நால்வர் நான்மணிமாலை முதலான சில நூல்களை அவரிடம் மு. வ. பாடங்கேட்டார். முருகைய முதலியார்மேல் மு. வ. கொண்ட அன்பு அளப்பரியது. உன்ன உன்ன உவகை அளிப்பது. தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராய், எடுத்துக் காட்டான வாழ்வினராய், எண் ணத்தால் சிறந்த எளிய வாழ் வினராய் --மு. வ. விற்கு முருகைய முதலியார் காட்சி வழங் கினர். அக் காட்சிகள் பின்னுளில் அவர் புனைந்த கதைகளில் ‘முருகையா’ என்னும் பெருமகனராக அமைந்து அழியா வாழ்வு பெற்றது. கள்ளோ? காவியமோ?’ ‘வாடா மலர்’ என்னும் இரு புனைகதைகளிலும் முருகைய முதலியார் வாழ்கிரு.ர்.

‘முருகையா : சுடர்விழியின் கணவன். மிக நல்லவர். கிராமப் பள்ளிக்கூடத்து ஆசிரியர். பல புத்தகங்களையும் படித் தறிந்தவர். ஆடம்பரம் எதுவும் பிடிக்காது. மிக எளிய வெள்ளை ஆடையே உடுத்துக் கொள்வார். காப்பி போன்ற குடிவகை எதுவும் பழக்கம் இல்லை. காலம் அறிந்து தம் கடமையைச் செய்யும் பழக்கம் உடையவர். தேவைகளைக் குறைத்துக் கொண்டு சிக்கலும் துன்பமும் இல்லாமல் வாழ்கிறார். முருகையா வின் மனம் செடிகொடிகளில் இருந்து பூப்பறிப்பதும் ஒரு குற்றம் என்று எண்ணும் மனம்.’’’ இது முருகையா அவர்களின் ஓவியம் ! நண்பர்கள் :

மு. வ. பள்ளியில் பயின்ற நாளில் நல்ல நண்பர்கள் நால் வர் வாய்த்தனர். அவருள் ஒருவர் மளிகைக்கடை தாமோதர முதலியார் ; இவர் நல்ல செல்வர் ; நெருக்கமாகப் பழகியவர். 1973 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினர்.

பிறிதொருவர் கவிநயம் கந்தசாமி முதலியார். இவர் உயர் நிலைப் பள்ளிகளில் பணி செய்து அண்மையில் ஒய்வு பெற்றுள் ளார். கவிச்சுவை சொட்டச்சொட்டச் சொற்பொழிவு ஆற்று தலில் தேர்ந்தவர். எனவே நண்பர்களால் கவிநயம்’ என அழைக்கப்பெற்றார்.

1. டாக்டர் மு. வ. கலேக்களஞ்சியம். பக். 58. திரு. இரா. மோகன்.

==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/35&oldid=586293" இலிருந்து மீள்விக்கப்பட்டது