பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பெருந்தகை மு. வ.

இன்னெருவர் நகைச்சுவை நாயகர் திரு. பி. எஸ். குப்பு சாமி முதலியார். இவர் சித்த மருத்துவர். மண்டிக் கடைக் கணக்கு எழுதுவதில் தேர்ச்சி மிக்கவர். நகைச்சுவை இவர் உரையாடலில் ததும்பி வழியும்.

மற்றாெரு நண்பர் பேராசிரியர் யோக சுந்தரம் ஆவர். இவர் சவ்வாது மலையடிவாரத்தில் உள்ள பூங்குளம் என்னும் ஊரினர். வேலூர் ஊரிசுக் கல்லூரியில் பல்லாண்டுகள் தமிழ்ப் பணி செய்து, மதுரைப் பல்கலைக் கழக அஞ்சல் வழிக் கல்வித் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். வேலூர் காட்டுப் பாடியில் ‘கண்ணகத்தில் வாழ்ந்து வருகிரு.ர்.

இந் நண்பர்களின் நட்பு, காலமெல்லாம் பொ, க்ெ கனிவு மிக்கதாக விளங்கியது. ‘நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை’ என்பதற்கு இவர்கள் நட்பு சீரிய எடுத்துக் காட்டாக இலங் கிற்று.

அலுவல் நாட்டம் :

பள்ளி இறுதித் தேர்வினை மு. வ. 1928 ஆம் ஆண்டில் எழுதிச் சிறப்பான தேர்ச்சி பெற்றார், கல்லூரியில் மேற் கொண்டு படிப்பதற்குக் குடும்பப் பொருள் நிலை இடந்தரவில்லை. ஆதலால் அவ்வளவில் அமைதி கொண்டு அலுவல் பார்க்கும் நிலைக்கு ஏவியது.

‘படித்தபின் வேலைக்குத் தேடி அலையும் அகலச்சலும், கவலையும் அந்தக் காலத்தில் இல்லை. உடனே தொழில் கிடைத் தது. அரசாங்க ஊழியன் ஆனேன்’ என்கிறார் மு. வ.’

அரசினர் பணி :

திருப்பத்துார் வட்ட ஆட்சி அலுவலகத்தில் ஒர் எழுத்தர்

வேலை மு. வ. வுக்குக் கிடைத்தது. அந்த இளமைப் பருவத் திலேயே எடுத்த பணியை ஒழுங்காகவும் செம்மையாகவும்

முடிக்கும் திறம் பெற்றிருந்தார். ஆதலால், மேல்நிலை அலுவலர்

களின் அன்பும் பாராட்டும் இயல்பாக வாய்த்தன. இவர் தம்

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS -

1. தினத்தந்தி. 8-7-1963.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/36&oldid=586294" இலிருந்து மீள்விக்கப்பட்டது