பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பெருந்தகை மு. வ.

போன்ற காளைப் பருவத்திலேயே கட்டுத் திட்டம் கொண்டு வாழ்ந்த வாழ்வே, அவரை அந் நிலைக்கு ஆட்படுத்திற்று. . நாட்டுப் பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட மு. வ. அவற்றை ஒடுக்குவதையே குறியாகக் கொண்ட அரசுப் பணியில் பாராட்டு மாறு கடமை புரிந்தது வியப்பேயாம். அதனினும் வியப்பு, அங்கும் நாட்டுப்பற்றை விடாப் பிடியாகக் கொண்டு விளங்கியதே யாம். மு. வ. அவர்களின் வளர்ச்சியில் தொடக்கநாள் முதலே பேரார்வம் காட்டியவராகிய திரு. கா. அ. சண்முக முதலியார் அவர்களின் மைந்தரும், பச்சையப்பன் கல்லூரி பி. ஒ. எல். (ஆனர்சு முதலணி மாணவர்கள் நால்வருள் ஒருவருமாகிய திரு. கா. அ. ச. இரகுநாயகன் அவர்கள் வீறுமிக்க செய்தி ஒன்றை விளக்குகின் ருர்.

‘அந்தநாளில் இவர் உடுப்பது முழுதும் கதரா டை. நாட்டுப்பற்று மிக்கவராய் இருந்தார். ஒருநாள் வேலூர் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரில் கடி தம் கொ டுத்துவரும் பணி இவருக்கு இடப்பட்டது. அப்போது நாட்டு விடுதலைப் போர் தீவிர நிலையில் இருந்தது. கதர் அணிந்தவர்கள் எல் லோரையும் ஆங்கில ஆட்சியாளர்கள் பகைவராய்க் கருதி வெறுத்தனர். இந்த நிலையில் மு. வ. அவர்கள் கதரா டை அணிந்து கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் முன் செ ல்வது தக்கதா என்று நண்பர்கள் தயங்கினர். இவருடைய பணிக்கு இடையூறு விளையுமோ என்று அஞ்சினர். ஆளுல் மு. வ. அவர்கள் தயக்கம் ஏதும் கொள்ளவில்லை. ‘வேலையை இழக்க நேரினும் சரி; ஆடையை நான் மாற்றிக் கொள்ளேன்’ என்று உறுதியாக நின் ருர், முன்னணித் தலைவர்கள் ஒருசிலர் வாழ்க் கையில் மட்டுமே காணக்கூடிய மன வலிமையை மு. வ. அவர் களிடம் காண்கின் ருேம்.”

அரசினர் பணியை விடுத்த மு. வ. தம் சொந்த ஊரான

வேலத்துக்கு வந்து சேர்ந்தார். அது முதல் அவர் வாழ்வு முழுமையான தமிழ் வாழ்வு ஆயிற்று.

  • = - m =

-

1. பேராசிரியர் மு. வ. பேராசிரியர்-அ. ப. I J. கருத்தரங்குக் கட்டுரைகள் பக். 49.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/38&oldid=586296" இலிருந்து மீள்விக்கப்பட்டது