பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலம் தந்த பெருவாழ்வு 29.

முழுநாளும் தங்கியிருந்து ஊர் திரும்பினர். அத்தகைய இயற்கைக் காதல் வாழ்வினர் மு. வ. வும், யோகசுந்தரமும்.

ஒரு நூல் :

வேலூரில் யோக சுந்தரத்தைப் போய்ப் பார்த்த மு. வ. அவர் மேசையின் மேல், செருமனிநாட்டு இயற்கை மருத்துவப் பேரறிஞர் கூன்’ என்பார் எழுதிய எல்லா நோய்களுக்குமான s»Før uvG#35 (The Oneaess of cure of all diseases) st sör Syld நூலினைக் காண நேர்ந்தது. அதனை மேற்போக்காகப் புரட்டிப் பார்த்தார். அவ்வளவிலேயே அந்நூல் இவர் நெஞ்சைக் கொள்ளை கொண்டது. தம் நண்பரிடம் கெஞ்சிக் கேட்டு ( ஏனெனில் அந்நூல் வேறொரு நண்பருடையதாகும்) வாங்கிக் கொண்டு வேலத்திற்குத் திரும்பினர். கடைப்பிடி:

நண்பரிடம் வாங்கிக் கொண்டு வந்த நூலை எழுவாய் முதல் இறுவாய் வரை ஆழ்ந்து கற்றார்; ஆய்ந்து தெளிந்தார்; அந் நூலில் கூறப்பட்டிருந்த இயற்கைமருத்துவ முறைகளைக் கையாள்வதென உறுதி கொண்டார்; அவ்வுறுதியால் பயனும் கண்டார். இருபதாவது வயதில் தொடங்கிய இயற்கை மருத் துவம், மு. வ. வின் வாழ்நாளின் இறுதிநாளுக்கு முதல்நாள் வரை எள்ளளவும் தவருமல் கடைப்பிடியாகக் கொள்ளப். பெற்றது.

இளமைதொட்டே கடைப்பிடிக்கப் பெற்ற இயற்கை மருத் துவத் திண்மை இலங்கையில் குரல் எழுப்புகின்றது.

‘நான் காந்தி வழியில் நடப்பவன். அவர் அம்மை குத்திக் கொள்ளக் கூடாது என்று பக்கம் பக்கமாக எழுதி யிருக்கிரு.ர். நான் அவருடைய கொள்கையை நம்புகிறவன். ‘என்னைப் போன்றவர்களுக்கு விதிவிலக்கு இல்லையா என்றேன்.

‘உடனே அவர் (தணிக்கை அலுவலர்) அம்மை பற்றிய சான்றை மறுபடியும் புரட்டிப் பார்த்து, என் கையையும் நீட்டச் சொல்லிப் பார்த்தார். இதோ குத்திக் கொண்டிருக்கிறீர்களே’ என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/41&oldid=586300" இலிருந்து மீள்விக்கப்பட்டது