பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:0 பெருந்தகை மு. வ.

‘இது இரண்டாவது முறையாகக் குத்தியது. காந்தி யடிகள் உயிரோடு இருந்த வரையில் நான் அம்மை குத்திக் கொண்டதே இல்லை. அவர் மறைந்த பிறகு இனி அவருடைய கொள்கைக்கு அரசாங்க ஆதரவு சிறிதும் இருக்காது என்று சென்ற ஆண்டில் குத்திக் கொண்டேன். இந்த ஆண்டில் அதன் சான்றுபெற முடியாமையால் இலங்கைக்கு வருவதற்காக மறுபடியும் குத்திக் கொண்டேன். மனச் சான்றுக்கு மாருகச் செய்து கொண்ட தவறுதான்’ என்றேன்.

를 畢 Fo 볼

அம்மை வந்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டார்.

‘எவருக்கும் அம்மை குத்தக் கூடாது என்று நான் சொல்ல வில்லையே. யார் தம்மைத் தாம் காத்துக் கொள்ள முடியுமோ அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் எனக்கு எந்தக் காரணத்தாலும் அம்மை வராது என்று உறுதி கூறுவேன். என் உடம்பு என் வசமாக இருக்கிறது. இப்படி என்னைப்போல் உறுதிகூற வல்லவர் இளிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுமதி தரலாமே, தவறி அம்மை வந்தால் என்னைத் தண்டிக்கலாமே என்றேன்.’

இயற்கை மருத்துவத்தில் மு. வ. கொண்டிருந்த அழுத்த LDIT GOT பற்றும், தம் உடலின்மேல் கொண்டிருந்த ஆட்சித் திற மும், நம்பிக்கை மேம்பாடும், இவ் வுரையாடலால் வெட்ட வெளிச்சம் ஆகின்றன அல்லவா ! இன்பத் தமிழ் நலம் :

இயற்கை வாழ்வும், இயற்கை மருத்துவமும் மட்டுமோ வின் நோயை அகற்றின? இயற்கை இன்பத் தமிழும் . له .upم நிலம் செய்தது, இயற்கை,_மருந்தாக உதவியது என்றால், இயற்கைத் தமிழ் அமிழ்தாக இருந்து ஊட்டமுற வளர்த்தது.

இயற்கை ஒவியம் பத்துப் பாட்டு;

இயற்கை இன்பக் கலம் கலித்தொகை;

1. யான் கண்ட இலங்கை. பக். 39-40.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/42&oldid=586302" இலிருந்து மீள்விக்கப்பட்டது