பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. திருப்பத்துார் சேர்த்த திரு

உடிைத் தோற்றம் :

‘மு. வ. அவர்கள், தமிழாசிரியராகப் பணியேற்ற முதல் நாளிலேயே தமக்கென ஓர் உடை அமைப்பை வகுத்துக் கொண்டார். அந்த அமைப்பு அவர் உயர்நிலைப் பள்ளியில் பணிசெய்த ஐந்து ஆண்டுகளில் ஒரு நாளும் மாறவில்லை. ஒவ் வொரு நாளும் அதே அமைப்புடன் விளங்கினர். வெள்ளைக் கைத்தறி வேட்டியை இடுப்பில் கச்சம் வைத்துக் கட்டுவார். வெள்ளைக் கதர்ச் சட்டையும் அதன்மேல் வண்ணக் கதர்க் கோட்டும் அணிவார். தலையில் பாகை அணி செய்யும். சிறு சந்தனப் பொட்டு முகத்தில் விளங்கும். மு. வ. அவர்களின் உடையில் பகட்டு இருக்காது. ஆசிரியருக்குரிய தோற்றம் பொலியும். கந்தையையும் அழுக்கையும் அவர் உடையில் காணமுடியாது.

வகுப்பு நடத்தும் திறம்:

மாணவர் உள்ளம் கொள்ளுமாறு மு. வ. பாடம் நடத் திர்ை என்பதைக் கூற வேண்டியதில்லை. அவர், தாம் வளர்ந் தவர், கற்றவர், ஆசிரியர், கட்டளை இடுபவர் - என்பதை மறந்து மாணவரோடு மாணவராக இழைந்து நின்று கற்பித் தார். சிறுவர்க்கு நடைபயிற்றும் தாயர் தாமும் தளர்நடை நடந்து பயிற்றுவிப்பது போல, மாணவர் மகிழும்வண்ணம் வழிகாட்டியாய்அமைந்து கற்பித்தார். அவர் வகுப்பு ஆய்வுப் பட்டறையாகவும், கருத்தரங்கமாகவும், சிந்தனை மேடையாகவும் இருந்தது எனின் உண்மையேயாம். இதோ ஒரு வகுப்பு நடை -பெறுவதைக் காணலாம்.

1. கா. அ. ச. ரகுநாயகன். பேராசிரியர் மு. வ. - பேராசிரியர் <弹· (ԼԲ- ԼՄ- கருத்தரங்கக் கட்டுரைகள். பக். Ꮞ? .

3-ـــــ. له . صرQL . G

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/45&oldid=586305" இலிருந்து மீள்விக்கப்பட்டது