பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பத்துார் சேர்த்த திரு 35

உணர்ந்து பணி செய்பவர் மாணவர்களுக்குத் தந்தையாவார் : தாய் ஆவார் ; தெய்வமும் ஆவார் ஊரெல்லாம் உறவினர் ஆவார்T அவர் நினைத்தது நடக்கும் அவர் வாழ்வு நிலக்கும். இத்தகைய ஆசிரியராக - பிறவி ஆசிரியராக அமைந்தவர் மு. வ. ஆதலின் அவர் ஆசிரியராகவும், ஆசிரியர்க்கு ஆசிரிய ராகவும் திகழ்ந்தார்.

ஆசிரியர் மு. வ. மாணவராக மாறுகிறார். மாணவர் உள் ளத்தை உணர்கிறார். தாம் மாணவராக இருந்த காலத்துத் தம் நிகழ்ச்சிகளையும் மறவாமல் போற்றுகிறார். மாணவர் தவறும் இடங்களில் பரிவுடன் பார்க்கிறார். காரணம் காண் கிறார் ; வழிகாட்டும் ஒளிவிளக்காகிறார்.

இளமையில் பள்ளிக்கூடத்தில் படித்தபோது நான் ஆசிரி யரிடம் கேட்ட ஒரு கேள்வி நினைவுக்கு வருகின்றது. சென்னை யில் சைபைசார் இருக்கின்றதே அதுபோல் சைவிைல் சென்னை பசார் உண்டா? என்று கேட்டேன். நீங்கள் எல்லாம் பெரிய வர்களாகிச் சைனவுக்குப் போய் வியாபாரம் செய்தால் அப்படி ஏற்படும் என்றார் ஆசிரியர்’ எனத் தம் இளமையை - இளமை நினைவை-மறவாது போற்றும் மு. வ. வின் ஆசிரியப் பணிச் சிறப்பை விரிக்க வேண்டுவது இல்லை.

திரு. வி. க. தொடர்பு :

உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடிந்தபின் திரு. வி. க. எழுதிய உரைநடை நூல்களைக் கற்றார்.” கற்ற நாள் முதல் அதன் நடையமைப்பிலும், பொருள் நயத்திலும் ஒன்றினர். அவர் இயற்றிய ஒவ்வொரு நூலையும் மறைமொழி யெனக் கொண்டு ஒதினர். அவர் சொற்பொழிவு கேட்பதற்கு வாய்ப்பு நேரும்போதெல்லாம் தவருது கேட்டார். எட்டி நின்று கேட்டு மகிழ்ந்தவர் ஒட்டி நின்று உறவாடும் பேறும் பெற்றார். அவ ருடன் உரையாடி இன்புற்றதுடன் உடன் சொற்பொழிவாள ராகவும் உலாவுதற்குச் செல்லுங்கால் உசாத் துணையாகவும் வளர்ந்தார்.

--

1. யான் கண்ட இலங்கை. பக். 44. 2. மொழியியற் கட்டுரைகள். பக். 35.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/47&oldid=586307" இலிருந்து மீள்விக்கப்பட்டது