பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பெருந்தகை மு. வ.

இராதா அம்மையார்க்குப் பெற்றாேர் இட்ட பெயர் சாரதா பாய்’ என்பதாகும். இவர் ஐந்து ஆண்மக்களுக்கு இடையே பிறந்த ஒரே ஒரு பெண் மகவு ஆதலால் மிகச் செல்வமாக வளர்க்கப் பெற்றார். ‘இவளைப் பெற்ற வயிறுடையாள் என்ன நோன்பு நோற்றாளோ’ என்று பாராட்டுமாறு எழிலும் பண்பும் கொஞ்ச வளர்ந்தார்; உள்ளூர்ப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை பயின் ருர். நல்லிளமைப் பருவத்திலேயே தேவார திருவாசகப் பாடல்களை நயமுறப் பாடி உருகும் திறம் பெற்றார்.

பிள்ளை விளையாட்டு :

இராதா அம்மையார் வீட்டார் மு. வ. வின் வீட்டார்க்கு நெருங்கிய உறவினர் அல்லரோ ஆகலின் இராதா அம்மையார் மு. வ. வீட்டுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு இருந்தது. அவர் மு. வ. வுக்கு ஐந்து வயது இளையவர். கள்ளம் கபடு அறியாமல் துள்ளி விளையாடும் இளம் பருவத்தினராகிய அவர்கள், தங்க ளுக்குள் விளையாட்டுச் சண்டை இட்டுக் கொண்டது உண்டு.

மொட்ட்ைச் சாமியார்:

வேலத்திலும்சரி, அம்மூரிலும் சரி வீட்டுத்திண்ணையில் அமர்ந்து எந் நேரமும் படித்துக் கொண்டே இருப்பார் மு. வ. முக்காடு இட்டு, முழங்காலைக் கட்டிக் கொண்டு சிறு மேசை முன் அமர்ந்திருப்பார். அவர் தோற்றம் இராதா அம்மையார்க்கு வேடிக்கையாகத் தோன்றியது. அதனல் மொட்டைச் சாமி யார்’ என்னும் ஒரு பட்டத்தைச் சூட்டினர்.

இராதா அம்மையார் திண்ணைப் பக்கம் வரும்போது “மொட்டைச் சாமியார் ஒரு சிறு கல்லை எடுத்து விளையாட்டாக அவர்மேல் வீசி எறிந்து விட்டு ஒன்றும் அறியாதவர்போல் படித்துக்கொண்டும், எழுதிக் கொண்டும் இருப்பார். இராதா அம்மையாரும் மொட்டைச் சாமியார் மேல் ஒரு கல்லை எடுத்து வீசிவிட்டு ஓடி விடுவதுண்டு. இத்தகைய விளையாட்டு எத் துணைப்பேர் வாழ்விலே விளையாட்டாகவே போய்விடுகின்றது! வெடிக்கும் துயராகவும் ஒழிகின்றது! ஆல்ை மு. வ. இராதா அம்மையார் இவர்கள் விளையாட்டு வாழ்வு பூத்துக் குலுங்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/50&oldid=586311" இலிருந்து மீள்விக்கப்பட்டது