பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பெருந்தகை மு. வ.

கமழவில்லை. அரசகுடும்ப மக்களுள் ஒருவகை இருந்தவன் முடிசூடி அரசாளத் தொடங்கும் நாளில் தன் பெயரை மாற்றிக் கொள்வதிலும், புதிய வாழ்வுபற்றிய உரிமை விளங்குகிறது: பெண்ணின் பெயர் மாற்றத்தில் இத்தகைய உரிமை மணம் g6ుడిు.'*

மு.வ. இராதா அம்மையார் வாழ்வு உரிமை வாழ்வாக-உள். ளன்பு வாழ்வாக-ஒருவரில் ஒருவர் கரைந்துவிடும் வாழ்வாக அமைந்தது.

‘முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானுள்

அன்னை யையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை;

தன்னை மறந்தாள் தன்னுமம் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே”

என்னும் நாவுக்கரசர் நன்மொழிக்கு ஏற்ப நங்கை இராதா அம் மையார் வாழ்வு அமைந்தது. அவ் வாழ்வே படிப்படியாக ஏறி, அறிவுப்பணியிலும், அலுவற் பணியிலும் கொடுமுடியை எட்டும் அளவுக்குத் துணையாய் அமைந்தது. மனமொத்த இல்வாழ்வே மணவாளனின் புறவாழ்வின் வெற்றிகளில் செம்பாதியன் று பெரிது’ என்பதை நிறுவினர் இராதா அம்மையார்.

முதன்மைத் தேர்ச்சியும் பரிசும் :

இனிய இல்லற வாழ்வின் இடையே வித்துவான் இறுதி நிலைத் தேர்வுக்கும் பயின்றார் மு.வ. பெப்ரவரித் திங்களிலே வாழ்க்கைத் தேர்வு நிகழ்ந்தது. ஏப்பிரல் திங்களிலே கல்வித் தேர்வு வந்தது. வாழ்க்கைத் தேர்வு தந்த வெற்றிபோலவே கல்வித் தேர்வு வெற்றி அமைந்தது. எப்படி? வித்துவான் இறுதி நிலைத் தேர்வில் முதல் வகுப்பில் முதலாமவராகத்

1. மொழியியற் கட்டுரைகள். பக். 268-4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/54&oldid=586315" இலிருந்து மீள்விக்கப்பட்டது