பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பெருந்தகை மு. வ.

பொய்கையாய் எண்ணித் திளைத்த எழிற்செல்வர் அவர்! அப் பெரியார் வாழ்வை எண்ணி எண்ணி உருகுபவர் மு. வ. கருதிக் கருதிக் கரைபவர் மு. வ. அவர் வாக்கை ஓதி ஓதி உவகை பெருகுபவர் மு. வ. ஆதலால் அவ்வரசின் பெயரையே தம் குடி விளக்க வந்த அரசுக்குப் பெயராகச் சூட்டினர். பெயர் சூட்டு தலில் எத்தகைய பெற்றிமை சூட்டப்படும் பெயர்கள் எல்லாம் பெயர்கள் தாமா !

1934 முதல் 1939 வரை ஐந்தாண்டுக் காலமே திருப்பத் துாரில் ஆசிரியப் பணிசெய்து வாழ்ந்தார் மு. வ. அக் குறுகிய காலத்தில் திருப்பத்துார் அவர்க்கு வழங்கிய திரு'க்கள் பலப் பல. ஆதலால் மு. வ. வின் ஏற்றமிக்க வாழ் வில் திருப்பத் துார்க்குத் தனிப் பெரும் சிறப்பான இடமுண்டு என்பது வெளிப் பேlை_.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/58&oldid=586319" இலிருந்து மீள்விக்கப்பட்டது