பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. ஒளிவளர் விளக்கு

திருப்பத்துார் மு. வ. வுக்குச் சேர்த்த திருக்கள் எவையெனக் கண்டோம். ஒளிவளர் விளக்கு என்னும் இப் பகுதியும் திருப்பத் துார் வாழ்வு பற்றியதேயாம். இப் பகுதியில் மு. வ. எவ்வாறெல் லாம் திருவாளராகத் திகழ்ந்தார் என்பதைக் காண்போம்.

தோற்றம் :

மு. வ. எடுப்பான தோற்றம் வாய்ந்தவர். நெடுமால் போன்ற நெடிய உருவமும் கரிய நிறமும் கொண்டவர். அவர் தம் கருநிறத்திலும் ஒளி விளங்கும். அவர் கண்கள் ஒளிமய மானவை. உள்ளொளி விளக்கத்தை அள்ளி வீசும் இயல் பினவை. அவர் பச்சையப்பர் கல்லூரிப் பேராசிரியராகப் பணி செய்தபோது அங்கே சொற்பொழிவாற்ற வந்திருந்த வழக் கறிஞர் திரு. செங்கல்வராயன் அவர்கள் தமக்கும் மு. வ. விற் கும் இடையில் ஒர் ஒற்றுமை நிலவுகின்றது என்றும், அஃது இரு வரும் நெடிய பெரிய தோற்றம் கொண்டிருப்பது என்றும் குறிப் பிட்டார். இயற்கையொடு போராடிக் கடுமையாக உழைக்கும் கூட்டம் என்பதற்கு அடையாளமே கருநிறம் என்பதைத் தம்

எழுத்துகளில் மு. வ. குறித்துள்ளார்.

காலைக்கட்ன் :

திருப்பத்துாரில் முத்துக்காரத் தெருவில் வாழ்ந்தார் மு. வ. திருமணத்திற்குப் பின்னரும் தம் தாய்-தந்தையர், பாட்டியார், தங்கையார் ஆகியவர்களோடு ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தார்.

வைகறையில் துயில் எழும் வழக்கத்தை அடிநாள் தொட்டே உடையவர் மு. வ. விடியற் காலையிலேயே சோலார் ப் பேட்டைச் சாலையோரத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய கிணற் ஆறுக்குச் சென்று, தம் துணிகளைத் தோய்த்து, நீரில் நீந்தி விஜன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/59&oldid=586320" இலிருந்து மீள்விக்கப்பட்டது