பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பெருந்தகை மு. வ.

யாடிக் குளிப்பார். ஈரத் துணிகளைக் காற்றிலும் கதிர் ஒளியிலும் காயப் போட்டுக்கொண்டு திரும்புவார். கொட்டும் மழைக் காலமே ஆயினும், கொடிய பனிக்காலமே ஆயினும், வருத்தும் வாடைப் பொழுதே ஆயினும் குளிர்ந்த நீரிலேயே குளிப்பார். குளித்து வந்த பின்னர்ச் சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்திருப் பார். திருநாவுக்கரசர், நம்மாழ்வார், தாயுமானவர், இராம கிருட்டிணர், விவேகானந்தர், இராம தீர்த்தர் முதலாகிய அருட் பெருமக்கள் பாடல்களையும் வாக்குகளையும் ஊன்றிப் படிப்பார்.

உணவு :

காலையில் தோசை, இட்டலி, பொங்கல் போன்ற சிற்றுண்டி களை உண்பார். தம் உடலுக்கு ஊறுவிளைக்காத உணவைத் தேர்ந்தெடுத்தே உண்பார். நாச்சுவைக்கு அடிமைப்பட்டுக் கண்ட கண்ட உணவுகளை உண்ணுர். காப்பி, தேநீர் முதலிய சுவைநீர் பருகார். பாலையும் சில வேளைகளில் அரிதாகவே பருகு வார். வெற்றிலைபாக்குப் போடும் பழக்கம் இவரிடம் இருந்த தில்லை. குடும்பத்தினர் புலால் உண்பவர் எனினும் இவர் சின்னஞ்சிறு வயதிலேயே அவ்வுணவை வெறுத்தார். மரக்கறி உணவே மனித வாழ்வுக்குப் போதுமானதும் பொருந்தியதும் ஆகும் என்னும் உறுதியான கொள்கையில் வளர்ந்தார். இவர் புலாலுண்பதை விடுத்தமையால் இவர் பாட்டியார் தாயார் மனைவியார் தங்கையார் ஆகியோரும் புலாலை நீக்கினர். இவர் தந்தையார் மட்டுமே புலால் உணவை விடமுடியாமல் தவித்து மேற்கொண்டிருந்தார்.

வறுமையிற் செம்மை :

ஏழ்மையுடன் எளிமையான வாழ்வு நடத்தி வந்தாலும் மு. வ. தம் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதற்காக எவர் உதவியையும் நாடுவார் அல்லர். வருவாய்க்கு ஏற்பச் செலவிட்டு வாழ்வதே வாழ்வு என்று தெளிந்திருந்தார். எத்தகைய பண நெருக்கடி நேரிட்ட பொழுதிலும் நெருங்கிய நண்பரிடத்தும் உரிமைச் சுற்றத்தாரிடத்தும் உதவிகேட்டு நிற்காத உறுதிப் பாட்டில் நின்றர். தமக்கு ஒரொரு கால் தட்டுப்பாடு நேரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/60&oldid=586322" இலிருந்து மீள்விக்கப்பட்டது