பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிவளர் விளக்கு 51

சமயப் பொதுமை :

திருப்பத்துாருக்கு அண்மையில் கிறித்து குல ஆசிரமம்’ என்னும் ஓர் அமைப்புளது. அது மருத்துவச் சாலையாக விளங்கி, ஏழை எளிய மக்களின் பிணிதீர்க்கும் பெரும்பணி செய்து வரு கின்றது. அம் மருத்துவ மனையில் டாக்டர் ஏசுதாசன் என்னும் தாய்மொழிப் பற்றுமிக்க மருத்துவர் ஒருவர் பணிசெய்து வந் தார். அவருடன் டாக்டர் பேட்ரன் என்னும் பெயருடைய “ஸ்காத்லாந்து நாட்டவரான ஒரு மருத்துவரும் பணிசெய்தார். வேறு வேறு மொழி பேசும் இளைஞர்கள் சிலரும் அம் மருத்துவ மனையில் பணியாற்ற வந்தனர். அவர்கள் அனைவரும் தமிழ் மொழியைக் கற்பதற்கு விரும்பினர். அதனை நிறைவேற்றுதற்கு டாக்டர் ஏசுதாசன் மு.வ. வின் உதவியை நாடினர். மு.வ. அப் பணியை உள்ளார்ந்த அன்புடன் ஏற்றுக்கொண்டு வாரத் திற்கு இரண்டு மூன்று நாள்கள் இரண்டுகல் தொலைவு நடந்து போய்க் கற்பித்தார். இத் தொண்டால் மருத்துவர்கள் இருவ ரொடும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. கிறித்து சமய உண் மைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாயிற்று.

ஒருசமயம் ‘தீனபந்து ஆண்ட்ரூஸ் அவர்கள் கிறித்தவ குல ஆசிரமத்திற்கு வந்து தங்கியிருந்தார். அவர் காந்தியடி களுடன் அணுக்கமாகப் பழகி, அவர்தம் பணிகளுக்கு உறுதுணை யாக இருந்தவர். அவர் தொடர்பும் நட்பும் பெறும் வாய்ப்பு மு. வ. வுக்கு உண்டாயிற்று. காந்தியடிகளிடம் அமைந்த சமயப் பொதுமை ஆண்ட்ரூஸ் அவர்களிடமும் காணப்பெற்றது. இதனை அவரிடமிருந்து மு. வ. கற்றுக்கொண்டார். பின்னர் இந்நெறி திரு. வி.க. அவர்கள் தொடர்பால் பெரிதும் வளர்க்கப் பெற்றதாகும்.

இடையருது கற்றல் : H.

கிறித்து குல ஆசிரமத்தில் சிறிய கோயில் ஒன்று உண்டு. விடுமுறை நாட்களில் மு.வ. அக் கோயிலுக்குச் செல்வார். அக் கோயிலின் உட்புறம் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு காலை முதல் மாலை வரையில் நூல்களை ஒதுவார்; நூல் நுதல் பொருளை ஆழ்ந்து எண்ணுவார்; வேண்டும் குறிப்புகளைத்

- -**

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/63&oldid=586325" இலிருந்து மீள்விக்கப்பட்டது