பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிவளர் விளக்கு 53

‘சுற்றம் என்ற சொல்லின் உண்மைப் பொருள் (முன் னேர் வழங்கிய பொருள்) என்ன என்பதை எனக்கு உணர்த் திய ஊர் அது (வேலம்). பங்காளிகளும் சம்பந்திகளும் ஆகிய இரத்தக்கலப்பு உள்ளவர்கள் மட்டும் சுற்றம் அல்ல; தொழி லாலும் உதவியாலும் நெஞ்சக் கலப்பு உடையவர்களும் சுற்றமே என்பதை அங்கு உணர்ந்த பிறகே, திருக்குறளில் உள்ள ‘சுற்றந் தழா அல்’ என்பது எனக்கு நன்கு விளங்கியது. தச்சர், கருமார், இடையர், உழவர், குயவர் முதலிய வெவ்வேறு குடும் பத்தைச் சார்ந்தவர்கள் என்னைத் தம்பி என்றும், அண்ணன் என்றும், மாமன் என்றும், மச்சான் என்றும், மருமகன் என் றும், அத்தான் என்றும் அன்புடன் அழைத்தார்கள். உறவு முறை கொண்டாடாமல் பேசியவர்கள் மிகக் குறைவே. மரு மகன் என்று என்னை அன்பாக உறவு கொண்டாடிய ஒரு செட்டி யாரையும் தம்பி தம்பி’ என்று ஆர்வத்துடன் அழைக்கும் ஓர் ஆச்சாரியையும் என்னுல் மறக்கமுடிவதில்லை. வேலத்துச் சட் டக்கல் போலவும், கூசுமலை போலவும் அவர்கள் என்றும் என் நெஞ்சில் நீங்காமல் நிற்கிறார்கள்.’ -

மு.வ. தம் நண்பர்களின் வாழ்வில் ஏதேனும் இடர்ப்பாடு உண்டாயிருப்பதாக அறிந்தால் அவர்கள் அறியாமலே தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து இனிதுறுத்துவார். எவருடைய குறையாயினும் அதனை அவர் வெளிப்படக் கூருர். பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு’ என்னும் அருளறம் அவர் வாழ்வில் தனிப் பெரும் சிறப்புடன் திகழ்ந்தது. அதேபோல் உரிமை நண்பர்களே ஆயினும் உழுவலன்புடன் இடித்துரைத் துப் புண்ணுக்கவும் செய்யார். தம் கருத்தைப் பிறர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அதற்காக ஏமாற்றமோ, மன மாற் றமோ, காழ்ப்புணர்வோ கொள்ளார்.

தம் உணர்ச்சிகளை மறைத்துப் பழகும் ஆற்றல் மிக்கவர் மு.வ. ஆதலால் மாற்றுக் கருத்து உடையவர்களிடத்தும் எப் போதும் போலவே இனிதுறப் பழகுவார். பொதுவாகத் தருக் கங்களில் இறங்கவே இறங்கார். பிறர் கூறும் கருத்துகளை வன்மையோடு எதிர்க்கமாட்டார். ஏற்கமுடியாத கருத்தாக

1. ஆனந்த விகடன். எங்கள் ஊர் : வேலம். 3.8-1969.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/65&oldid=586327" இலிருந்து மீள்விக்கப்பட்டது