பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பெருந்தகை மு. வ.

இருந்தாலும் அதனை மறுத்துப்பேசாமல் முகத்தில் முறுவல் காட்டி அமைதியாக இருப்பார். பகைபாராட்டாமை மட்டு மன்று, பகைவனுக்கும் அருளும் நன்னெஞ்சம் அவர் நெஞ்சம்!

‘ஒருநாள் நல்லெண்ணம் வாய்ந்த, ஆளுல் ஒருவகை மனச் சலிப்பு ஊட்டுகின்ற ஆங்கிலேய அம்மையார் ஒருவர் வந் தார். அவரை ஒருவகைப் பொழுது போக்குச் சமயப் பரப்புநர் எனலாம். டாக்டர் மு.வ. அவர்களிடம், இந்து தருமத்தை விடத் தாம் மெய்யெனக் கருதும் கிறித்துவ சமய அறங்களின் உயர்வையும் சிறப்பையும் அந்த அம்மையார் விளக்கலாஞர். பற்றற்ற பார்வையாளருக்கு அவ்வம்மையாரின் சொற்கள் வசை புராணமாகவே தோன்றும் எனினும் பொறுமையுடனும் அருளி ரக்கத்துடனும் இருந்த புறச் சமயத்தைச் சார்ந்த மு.வ. அவ் வம்மையின் பலவீனமான வாதங்களைத் தகர்த்து எறிந்து, மனம் புண்படுமாறு யாதும் சொல்லவில்லை. விரும்பியிருந்தால் மிக எளிமையாக அவ்வாறு அவர் செய்திருக்கலாம். இதற்கு மாருக நெடுநேரம் அவ்வம்மையாரைப் பேசவிட்டு, மனத் தாங்கல் யாதும் இன்றி அவ்விடத்தை விட்டுப் போகுமாறு அவர் செய்தார்’ என்று எடின்பரோ பல்கலைக் கழகத்தைச்சேர்ந்த டாக்டர் ஆர். இ. ஆஷர் தம் பசுமையான நினைவாகக் குறிப்பிடு கின்றார். இத் தன்மை தொடக்கநாள் முதலே மு.வ. வினிடம் துலங்திய தாகும். “நித்தம் நடையும் நடைப்பழக்கம்’ என்பது பட்டறிவின் முதிர்வால் வெளிப்பட்ட மொழியே யன்றாே!

பி.ஓ.எல் பட்டிம் பெறுதல்:

வித்துவான் தேர்வு முடித்த பின்னரும் தேர்வு நாட்டம் மு.வ. வுக்கு மிகுந்திருந்தது. மேற்பட்டம் பெறுவதற்கு விரும் பினர். அயராது உழைத்தார். தமிழ் நூல்களுடன் ஆங்கில நூல்களும் நிரம்பக் கற்றார். சென்னைப் பல்கலைக் கழகம் நடாத் தும் பி.ஓ.எல் பட்டத்தில் முதல்வகுப்பில் தேர்ந்தார்.

பி.ஓ.எல் பட்டம் பெற்ற அளவினும் மு. வ. வின் கல்வி ஆர்வம் அமையவில்லை. மேற் கல்வியை விரும்பினர். ஆராய்

1. செந்தமிழ்ச் செல்வி - ஒளிவிளக்கு. சிலம்பு 50. பக். 215.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/66&oldid=586328" இலிருந்து மீள்விக்கப்பட்டது