பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\

ஒளிவளர் விளக்கு 55

வுக்கு வேண்டிய கருவிநூல்கள் பலவாதலை எண்ணினர். கருவி நூல்கள் தாம் வதியும் திருப்பத்துாரில் கிடைத்தற்கு அருமையை உணர்ந்தார். ஆதலால் தம் மேற்படிப்புக்கும் ஆய்வுக்கும் வாய்ப்பாகச் சென்னை செல்லுதலே நலம் எனக் கருதியிருந்தார். திருவருளின் எண்ணமும் அதற்குத் துணை நிற்பதுபோல அமைந்தது.

1939ஆம் ஆண்டு மேத் திங்களில் செய்தித் தாளில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. அதில் சென்னைப் பச்சையப்பர் கல் லூரித் தமிழ்த் துறைக்குத் தமிழாசிரியர் ஒருவர் வேண்டும் என் னும் குறிப்பு இருந்தது. அதனைக் கண்ணுற்றார் வேலூர்ப் பெரி யவர் மாசிலாமணி முதலியார். அவருக்கு அவ் விளம்பரத்தைக் கண்டதும் மு.வ. வின் நினைவே முந்தி நின்றது. தம் உறவின ரும் ஆசிரியருமான திரு. தெய்வசிகாமணி முதலியாரை அழைத் தார். இவ் வேலைக்குத் தக்கவர் மு. வ. வே என்று இருவரும் முடிவு செய்தனர். மு.வ. வுக்குக் கடிதம் எழுதினர். கடிதம் கண்ட மு.வ. கழிபேருவகையுற்றார். உடனே பச்சையப்பர் அறங்காவலர் குழுவுக்கு உரியமுறையில் ஒரு விண்ணப்பம் விடுத்தார். நேரே வேலூர்க்குச் சென்று மாசிலாமணி முதலி யார் அவர்களைக் கண்டார்.

மாசிலாமணி முதலியார் துணைவேந்தர் டாக்டர் ஆ. இலக் குமணசாமி முதலியார் அவர்களின் சிறிய மாமனர் ஆவர். இலக்குமணசாமி முதலியார் பச்சையப்பர் அறங்காவலர் குழு வில் இடம் பெற்றிருந்தார். ஆகலின் மு.வ. வைப் பற்றி இலக் குமணசாமி முதலியாருக்கு விளக்கமாகக் கடிதம் எழுதினர். இரண்டு நாள்களிலே மகிழ்வான மறுமொழிக் கடிதம் வந்தது. தகுதிவாய்ந்த ஒருவருக்கே தம் மாமனர் பரிந்துரை இருப்பதை அறிந்து மகிழ்ந்தார் இலக்குமணசாமி முதலியார். ஆதலால், அறங்காவலர் குழுவில் மு.வ. வின் பெயரை வைத்து இசைவு பெற்றார். பச்சையப்பர் கல்லூரித் தமிழ்த் துறையில் திருத்தா ளராக அமர்தற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. “திங்களுக்கு அறுபது ரூபா சம்பளம்’ என்றும், ஓராண்டுக்குப் பணி వాత றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

_

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/67&oldid=586329" இலிருந்து மீள்விக்கப்பட்டது