பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

பேராசிரியப் பெருந்தகை மு. வ. அவர்கள் இந்த நூற் ருண்டின் இணையற்ற செம்மலாய் விளங்கியவர். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும் தமிழ்மொழியும் தமிழர் இனமும் தழைத் தோங்குவதற்கும் மட்டுமன்றி மக்கள் இனத்துக்கும் வழிகாட்டிய பேரறிஞர் என்று அவரைக் கூறின் மிகையாகாது.

சிற்றுாரிற் பிறந்து படிப்படியாக வளர்ந்து தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கியவர். மதுரைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராய் அமர்ந்து யாவரும் பாராட்டும் வண்ணம் செய்ய வேண்டிய பணிகளனைத்தும் செம்மையுறச் செய்து புகழ் பெற் றவர். இயற்கை யறிவின்துணை கொண்டு கலைத்துறைகள் பல வற்றிலும் தேர்ச்சியும் தெளிவும் பெற்று விளங்கினர். அவர் எழுதியுள்ள நூல்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகள் நிலை பெற்று நின்று மக்களுக்குப் பயன்படுவதோடு அவர் புகழை வளர்த்து விளங்கும்.

திருவள்ளுவர், காந்தியடிகள், தாயுமானவர், மணிவாசகர், இராமதீர்த்தர் , திரு. வி. க. முதலிய பெரியோர்களின் நூல் களைக் கற்றதோடு அவர் கருத்துரைகளைத் தம் வாழ்க்கையில் கடைப் பிடித்து வாழ்ந்தார். அவருடைய வரலாறு இக்கால மக்களுக்கு மட்டுமன்றி வருங்காலத் தமிழ் மக்களுக்கும் மிக்க பயன் தருவதாகும்.

இத்தகைய சிறந்த வரலாற்று நூலைப் பெருந்தகை மு. வ. -என்னும் பெயர மைத்து எழுதி உதவிய தமிழ்ப் பேரறிஞர் டாக்டர். சி. பாலசுப்பிரமணியம் M.A., M. Litt., Ph. D. அவர்கட்கும் இந்நூலை உருவாக்குவதில் அவர்கட்கு உறுதுணையாயிருந்து செம்மைப்படுத்திக் கொடுத்த புலவர் இரா. இளங்குமரன் அவர்கட்கும் கழகத்தின் நன்றியுரியதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/7&oldid=586332" இலிருந்து மீள்விக்கப்பட்டது