பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பெருந்தகை மு. வ.

ஆயினும் பதவி நீட்டிப்பு ஆணை வரவில்லை. மு. வ. வுக்கு உளைவு ஏற்பட்டது. தாம் பணி செய்துவந்த திருப்பத்துர் உயர்நிலைப் பள்ளிக்கே சென்று விடலாமா என்றும் எண்ணினர். ஆயினும் தமக்கு வேலை பெற்றுத் தந்த டாக்டர் ஏ. எல். முதலியார் அவர்களே அணுகிக் கேட்பது நல்லது என்னும் முடிவுக்கு வந்தார்.

ஏ. எல். முதலியார் அப்பொழுது எழுமூர் மகப்பேறு மருத் துவமனையில் முதல் இந்தியத் தலைமை அலுவலராக (Superintendent of the Hospital) @(55g, sub žm ř. -osusori sírsir பதற்கு அங்கே சென்றார். மு. வ. அப்பொழுது இருள் கவிந்து கொண்டுவரும் அந்திப் பொழுது. டாக்டர் ஏ. எல். முதலியார் தம் பணிகளை முடித்து விட்டுத் தம் வண்டிக்கு வந்து அமர்ந்து, முன் விளக்கைப் போட்டுவிட்டு வண்டியை எடுக்கத் தொடங் கினர். வண்டியின் முன்னே மு. வ. விரைவாக வருவதைக் கண்டு முன் விளக்கை அனைத்துவிட்டுப் புறப்படுவதை நிறுத்தினர். மு. வ. தம் அருகில் வந்ததும் என்ன செய்தி வரதராசன்?” (What is the matter Mr. Varadarajan) srsorg), Gâl-Lirit. அதற்கு மு. வ. எனக்கு வழங்கப் பெற்ற ஓராண்டுப் பணிக் காலம் முடிவடைகின்றது. பதவி நீட்டிப்பு இன்னும் செய்யப்பட வில்லை. மனம் துன்புறுகின்றது’ என்றார். இச் சொற்களைக் கேட்ட டாக்டர் ஏ. எல். முதலியார், “கவலைப்படாதீர்கள்; பணி யில் நீங்கள் நிரந்தரம் ஆக்கப் படுவீர்கள்’ (Don't worry Mr. Varadarajan, you will be Confirmed) Grsorg). Borscludirts, use or 3. தார். சொல்லிய வண்ணமே பணியை நிரந்தரப் படுத்தியதுடன், பதவி உயர்வும் வழங்கினர். திருத்தாளராக இருந்த மு. வ. “கீழ்த்திசை மொழிகளின் விரிவுரையாளர் (Lecturerin Oriental Languages) என்னும் பதவியாளராக உயர்ந்தார். அவ் வாண்டி லேயே பச்சையப்பர் கல்லூரியில் பி. ஓ. எல். பட்டப் படிப்புத் தொடங்கப் பெற்றது. அதே ஆண்டில் சைபைசாரில் இயங்கி வந்த பச்சையப்பர் கல்லூரி, சேத்துப்பட்டில் புதிதாக எழுப்பப் பெற்ற கட்டடத்திற்கு மாறியது. அமைதி மிக்க சூழலில் அமைந்த புதுக் கட்டடம் மு. வ. வின் மனத்திற்கு மிகப் பிடித்த மாக அமைந்திருந்தது. இப்பொழுது தமிழில் மேல் நிலைப்பட்டப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/70&oldid=586333" இலிருந்து மீள்விக்கப்பட்டது