பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 592

படிப்பு வகுப்புகள் பலப்பல கல்லூரிகளில் உள்ளன. ஆல்ைபச்சையப்பர் கல்லூரியில் பி. ஓ. எல். தொடங்கியபோது இருந்த காலநிலை இத்தகையது இல்லை. சென்னைப் பல்கலைக் கழகத் திலேயே முதன் முதலாகத் தமிழுக்கென்று பட்டப்படிப்புத் தொடங்கப் பெற்றது பச்சையப்பர் கல்லூரியில்தான். அதனைத்தொடங்குவதற்கு அயராது உழைத்து வெற்றி கண்டவர் மு. வ. தாம். தாம் புகுந்த துறையைப் பொலிவுறச் செய்வதில் மு. வ. கொண்ட ஆர்வம் இதல்ை நன்கு வெளிப்படும்.

மு. வ. வின் முயற்சி இவ்வளவுடன் அமைந்ததா?

‘முதல்அணி மாணவர்கள் இண்டர் மீடியட் வகுப்பில் தேர்ச்சி பெற்று 1942-சூன் திங்களில் பி. ஓ. எல். வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கி விட்டார்கள். மு. வ. அவர்களின் உள்ளத்தில் அமைதி இல்லை. ஏதோ ஒரு போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பி. ஏ., என்னும் பட்டத்துக்குரிய மாணவர்கள் இண்டர் மீடியட்டுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் படித்து அந்தப் பட்டத்தைப் பெறுகின்றனர். ஆயின் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்கள் மட்டும் இண்டர்மீடியட் படித்த பின்னர் மூன்று ஆண்டுகள் படித்துவிட்டு பி. ஏ. பட்டத்துக்கு ஒத்த பி. ஓ. எல். என்னும் பட்டம் பெறும்நிலை உள்ளதே என்று அவருடைய மனம் புழுங்கியது.

பல்கலைக் கழகத்துக்குச் சென்றார். அறிவு சான்ற துணை வேந்தர் டாக்டர் ஏ. எல். முதலியார் அவர்களைக் கண்டு, பி. ஓ. எல். படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு வாய்த்துள்ள அவல நிலையை எடுத்து விளக்கினர். பி. ஏ. மாணவர்கள் படிக்கும் பாடங்களின் அளவையும் பி. ஓ. எல்; மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்களின் அளவையும் ஒத்திட்டுக் காட்டினர். பி.ஓ.எல்., படிப்புக்குரிய நூல்கள்.பி.ஏ., நூல்களைவிடப் பன்மடங் காக விரிந்திருப்பதை உணர்த்தினர். பி. ஓ. எல்., படிப்பை மூன்று ஆண்டுகள் படிக்கும் மாணவர்களுக்கு பி. ஒ. எல்., என்று ஒரு பட்டம் அளிப்பதற்குப் பதிலாக ஆனர்சு பட்டம் அளிக்க வேண்டுமென்று மன்றாடினர். துணைவேந்தர், மு. வ. அவர்கள் எடுத்துக் காட்டிய நியாயத்தைத் தெளிந்துகொண்ட பின்னரும் .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/71&oldid=586334" இலிருந்து மீள்விக்கப்பட்டது