பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 பெருந்தகை மு. வ.

விதிகள் இடம் தரவில்லையே’ என்று தயங்கலானர். இறுதி

வாக பி. ஓ. எல்., மாணவர்கள் ஏதாவது இன்ைெரு பாடத்தைக் கூடுதலாகப் படிக்க வேண்டும் என்றும் அப்படிப் படிப்பதாகுல் *பி. ஒ. எல். (ஆனர்சு) என்று பட்டம் வழங்கலாம் என்றும் சொல்லி விட்டார்.’

துணைவேந்தர் கருத்தை மாணவர்க்கு நயமான முறையில் எடுத்துரைத்தார் மு. வ. ஆர்வ மூட்டினர்; சிறிது கூடுதலாக உழைத்தால் அதற்கேற்ப உயர் பட்டம் வரும் வகையை மொழிந்து நெறிப் படுத்தினர். ஆசிரியர் ஆர்வத்தையும் தமக் காக உழைத்த உழைப்பையும் உண்மையாக உணர்ந்து கொண்ட மாணவர்கள் அவர் வழியிலே நின்று அரிய தேர்ச்சி காட்டினர். இறுதியாண்டிலே திட்டப்படியான தாள்களுடன் இந்திய வரலாறு பற்றிய ஆங்கிலத்தாள் ஒன்றும், சிலப்பதி காரம் மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியம் பற்றி ஒருதாளும் சேர்த்து எழுதினர். மு. வ. இவ்வளவுடன் நின்றார் அல்லர். .பி. ஒ. எல். (ஆனர்சு) பட்டம் பெற்ற மாணவர்கள் எம். ஏ., பட்டம் பெறவும் உரிய வகையில் கூறி வகை செய்தார்.

மாணவர் உயர்வுக்கான வழிகளைத் தாமே கருதிக் கருதிக் கடனுற்றிய மு. வ. கல்லூரி வகுப்பை எவ்வாறு நடத்தினர்?

கழுத்துவரை மூடிய நீண்ட கோட்டு, வெள்ளைத் தலைப் பாகை, நெற்றியில் சந்தனப்பொட்டு ஆகிய கோலத்துடன் மு. வ. அவர்கள் எங்கள் வகுப்பிற்குள் முதன் முதலாக 1940 ஆம் ஆண்டு சூன் மாதம் நுழைந்தார். அவர் தோற்றப் பொலிவும், முகத்தில் தவழ்ந்த இனிமையும் நிமிர்ந்த நன்னடை யும் எங்களை ஆட்கொண்டன. திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் என்ற நூலை முதல் பாடமாகத் தொடங்கினர். தமிழ்த் தெய்வ மான முருகனை இலக்கிய உலகில் அவர் அறிமுகம் செய்தவிதமே தனிச் சிறப்புடன் திகழ்ந்தது. அதை அடுத்து நம்பி அகப் பொருள்’ என்ற இலக்கண நூலைப் பாடம் சொல்லி விளக்கினர். ஆம், தேனில் இனிமையைக் குழைத்துச்செந்தமிழ்ப் பாலினை -- :ஊட்டத் தொடங்கினர். அள்ள அள்ளக் குறையாத தமிழ்

--

-

H. குன்றின் மேல் கின்ற ஒளி. திரு. கா. அ. ச. ரகுநாயகன். —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/72&oldid=586335" இலிருந்து மீள்விக்கப்பட்டது