பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<$2 பெருந்தகை மு. வ.

கொண்ட பற்றும், திரு.வி.க. தொடர்பும் மட்டும் கதர்ப் பற் 1றுக்குக் காரணமாக இருந்தன வல்ல. மு.வ. வின் தமக்கையார் கணவர் சிறந்த காங்கிரசுத் தொண்டர்; சிறைக்கும் சென்றவர். அவருக்கு ஆர்க்காட்டில் கதர்க்கடை ஒன்றும் உண்டு. அக் கடையில் மு.வ. 1931 முதல் 1934 வரை சில சமயங்களில் வாணிகம் செய்ததுண்டு. ஆகலின் கதர் உடுத்துதல் குடும்பச் செல்வமாக இருந்தது. தம் ஆழ்ந்த எண்ணத்தாலும், அவ் வடையே உடலுக்கும் உள்ளத்திற்கும் நிறைவு தருவது எனத் தெளிந்தார். ஆகலின் கதர் உடுப்பதைக் கடமையெனப் போற் றிஞர். ஆனல், கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் மோசூர் கந்த சாமி முதலியார்க்கு மு.வ. கதர் உடையுடன் கல்லூரிக்கு வருவது உவப்பாகத் தோன்றவில்லை. கதர் உடையால் மு.வ. வின் வேலைக்கு ஏதேனும் இடையூறு வந்துவிடுமோ என்றும் அஞ்சி ஞர். அதனல் மு.வ. வை ஒருநாள் அழைத்து ‘அப்பா வரத ராசன்! நீ இனி பி.ஓ.எல். போன்ற உயர் வகுப்புகளுக்குப் பர்டம் கற்பிக்கப்போகிறாய். ஆதலின் நீ பழைய தமிழ் நாட்டு முறையில் உடையணிய வேண்டா. ஏனைய விரிவுரையாளர் களைப் போல் மேனுட்டுப் பாணியில் சூட்டு கோட்டு முதலிய உடைகளை அணிந்துவா. ஆல்ை நெற்றியில் சந்தனப் பொட்டை மட்டும் மறந்து விடாதே’ என்று அன்புக் கட்டளையிட் டார். அவர் தம்மிடம் காட்டிய பேரன்பாலும் மதிப்பாலும் அவர் சொல்லை மீறி நடக்க மு.வ. வில்ை முடியவில்லை. எனவே தமிழ் நாட்டு முறையில் கீழ்ப் பாய்ச்சும் தலைப்பாகையும் கட்டிவந்ததை விட்டுவிட்டு மேட்ைடு முறையில் உடையணியத் தொடங்கினர்.

பருத்தியினல் ஆகிய இம் மேட்ைடு உடை அணிதலும் நெற்றியில் சந்தனப் பொட்டு இடுதலும் சில ஆண்டுக் காலமே நிலைத்தன. ஏறத்தாழ எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு-1950ஆம் ஆண்டு தொடங்கி-முன்போல் கதர் உடைகளே ஆயின. காசுப்பையும் அரைஞாண் கயிறும் கூடக் கதராகின.

தொடக்கத்தில் மு. வ. குடும்பம் ஜார்ஜ்டவுன் பகுதியில் வேங்கடேச நாயக்கன் தெருவில் ஒரு மேல்மாடிக் கட்டடத்தில்

1. குமுதம் 21-11-74. ப. 1. அரசு கடிதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/74&oldid=586337" இலிருந்து மீள்விக்கப்பட்டது