பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 63

இருந்தது. அங்கே இருக்கும்போது மு. வ. வுக்கு ஒரு பெண் மகவு பிறந்தது. அதற்குத் திலகவதி’ என்று பெயர்வைக்கலாம் என எண்ணியிருந்தார். அவர் விரும்பிப் போற்றும் பெருந்தகை அப்பரடிகளின் தமக்கையார் பெயர் திலகவதியார் என்பது. அன்றியும் தம் வழிகாட்டியாக விளங்கும் பெரியார் திரு. வி. க. வின் செல்வியாகிக் கால் காட்டிக் கை காட்டி நகைமுகங் காட்டி ஈராண்டளவில் இயற்கை எய்திய திலகவதியின் நினைவும் கூடியது. ஆல்ை, மு. வ. வின் திலகவதியாகத் திகழப் பிறந் ததும் சில வாரங்களிலேயே இயற்கை எய்தியது! பிற்காலத்தில் மு. வ. தம் மனைவியாரோடு அப் பக்கம் செல்ல நேருங்கால் நம் குழந்தை இங்கே தானே இருக்கிறது’ என்று துயரோடு அப்

பகுதி இடுகாட்டைச் சுட்டிக் காட்டுவார்.

1943 ஆம் ஆண்டில் மு. வ. வுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அப்பொழுது மு. வ. வின் நினைவு பாவலனுகவும் காவலனுகவும் திகழ்ந்த ஒரு பாண்டிய மன்னன் மேல் சென்றது. தொல் பழங்காலத்திலேயே கல்வியின் மேம்பாட்டை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அளவுக்கு உணர்ந்து உரைத்த அப் பெரு நாவலன் பாடல்மேல் சென்றது; “உற்றுழி உதவியும்’ என்னும் அப் பாட்டைப் பாடிய பாண்டியன் அறிவுடை நம்பியின் பெயரின் மேல் சென்றது; தம் குழந்தையின் திருப்பெயர் மேல் சென்றது; ‘நம்பி’ என நற்பெயர் சூட்டி நாமணங் கொண்டது; நெஞ்சம் இனித்தது; செவி குளிர்ந்தது.

ஆறு ஆண்டுகள் உருண்டன. மு. வ. வுக்கு மூன்றாவது செல்வமகன் பிறந்தான். தொண்டர் தம் பெருமையைப் போற்றிய அவர், அறிவுப் பணியிலே ஊன்றிய அவர், ஈட்டிய வெல்லாம் இதற்காகவே’ என்று கொடுக்கும் கொடை வள்ள லாகத் திகழ்ந்த பாரியை எண்ணினர்.

“பூத்தலை அரு.அப் புனைகொடி முல்லை நாத்தமும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர்’ வழங்கிய பாரியின் கொடையை எண்ணினர். இறைவன் கொடை யாக வந்த இனிய செல்வனுக்குக் கொடை மன்னன் பாரியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/75&oldid=586338" இலிருந்து மீள்விக்கப்பட்டது