பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 65

தாமரைச் செல்வர் வ. சுப்பையாபிள்ளை அவர்களுக்கும் மு. வ. விற்கும் தொடர்பு உண்டாயிற்று. அத் தொடர்பு நாளும் வளர்ந்து மு. வ. சென்னைக்கு வந்ததும் சுடர்விடுவதாயிற்று. மு. வ.வுக்கு முதற்கண் வீடு அமைத்துக் கொடுத்தவரும் அவரே. மு.வ.வின் எழுத்தோவியங்களை அச்சூர்தி ஏற்றி அழகு செய்வித்தவரும் அவரே. முதன்முதலாக மு.வ. வின் பெயரைப் பட்டி தொட்டிகளெல்லாம் ப்ரப்பிய ‘திருக்குறள் தெளிவுரையை வெளியிட்டு எட்டு நூருயிரம் படிகள் விற்பனை செய்த அயரா முயற்சியாளரும் அவரே. மு. வ. வின் தொடக்ககால நூல்வெளியீடு குறித்து அவரே உவகை பெருக உரைக்கின்றார்:

‘அவர் (மு. வ) திருப்பத்துார்ப் பள்ளியினின்றும் விலகிச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் துணை விரிவுரை (Tutor) யாளராக 1939இல் அமர்த்தப் பெற்றார். சென்னையிலே அவர் குடியிருப்பதற்குத் தங்கசாலையை அடுத்துள்ள வெங்கடேச நாயக்கன் தெருவில் ஒரு வீடு அமைத்துக் கொடுத்ததோடு அடிக்கடி அவர் இல்லஞ் சென்று அவரோடு அளவளாவி வருவ துண்டு. நெடுநேரம் இருத்தலோ வீண் உரையாடலோ செய்யேன். அவரும் அதை விரும்பார். சிறுவர்கட்கு எளிய நடையில் குழந்தைப் பாடல்களும் சிறுகதைகளும் எழுதுமாறு வேண்டினேன். குழந்தைப் பாடல்கள் சிலவற்றை ஆக்கித் தந்தனர். அவற்றைப் படங்களுடன் ‘குழந்தைப் பாடல்கள்’ என்ற தலைப்பமைத்து வெளியிடலானேன்; அவர் எழுது கோலால் முதன்முதல் எழுதப்பெற்ற நூல் அதுவேயாகும். அதனை அடுத்து அவர் எழுதியவை இளைஞர்க்கான சிறு கதைகள்’ என்ற நூலும், செகப்பிரியர் நாடகக் கதைகளில் ஆறு கதைகள் அடங்கிய இரு நூல்களுமாகும். சார்லஸ் லாம் ஆங்கிலத்தில் எழுதிய கதைகளைக் கொண்டு செகப்பிரியர் நாடகக் கதைகள்’ எழுதப் பெற்றனவாகும். முதற்புத்தகத்தில் வெனிசு வணிகன்’, ‘விரும்பிய வண்ணமே’, ‘மாக்பெத் ஆகிய மூன்றும், இரண்டாவது புத்தகத்தில் புயற் காற்று’, ‘லியர் மன்னன்’ ஆம்லெத் ஆகிய மூன்றும் அடங்கியுள்ளன.

பெ. மு. வ.-5 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/77&oldid=586340" இலிருந்து மீள்விக்கப்பட்டது