பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பெருந்தகை மு. வ.

“இவற்றை யடுத்துப் புலவர் திரு. மு. வரதராசகுர் புதிய பாடத் திட்டத்தின்படி தொடக்கப்பள்ளிக்கும், நடுநிலைப் பள்ளிக்குமாகக் கழகத் தமிழ் இலக்கணம்’ என்ற தலைப்பில் இரு நூல்களை எழுதியுள்ளார்.

1941இல் மேட்ைடுச் சிறுகதைகள் சிலவற்றைத் தழுவி சிறுவர்கள் விரும்பிப் படிக்கும்பொருட்டு எளிய நடையில் சில கதைகளே எழுதித் தந்தனர். அவை கழகச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் மூன்று சிறு நூல்களாக வெளியிடப் பெற்றன. 1942இல் உயர்நிலைப்பள்ளிப் பாடத் திட்டத்திற்கேற்ப அவர்கள் எழுதித் தந்த, கழ்கத் தமிழ் இலக்கணம் மூன்றா வது புத்தகம் வெளியிடப் பெற்றது.’

படிக்காத மக்கள் தம் வாழ்க்கையில் படும் தொல்லைகளை யும் இடர்களையும் தம் பட்டறிவில் கண்டவாறு அறிஞர் சிலர் அனுப்பிய குறிப்புகளைக் கொண்டு தம் கருத்துகளையும் இணைத்துப் படியாதவர் படும்பாடு’ என்னும் தலைப்பில் ஒரு நூல் இயற்றினர். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்னும் நன்மொழி நயமாக விளக்கும் வண்ணம் முதியோர் கல்விக்குப் பயன்படும் வகையில் விளுவிடை அமைப்பில் கண்ணுடைய வாழ்வு’ என்னும் தலைப்பில் ஒரு நூல் யாத்தார். இந்நூல் மட்டுமே மு. வ. வின் பெயரால் வெளிப்பட்டது. ஏன் மற்றை நூல்களில் மு. வ. வின் பெயர் பொறிக்கவில்லை என்னும் எண்ணம் எவர்க்கும் உண்டாதல் இயல்பு. இதுகாறும் அவரால் எழுதப்பெற்ற நூல்களில் தமது பெயரை நூல் முகப்பிலோ விளம்பரத்திலோ குறிக்க வேண்டா என அவர் கூறியவாறு குறிக்கவில்லை’ என்பது உரிய விடை யாகும். புகழ் விரும்பாப் புகழ் வாழ்வு மு.வ.வுக்கு முதிர்ந்த காலத்தே தோன்றியதன்று! அரும்பிய காலத்திலேயே அமைந் தது என்பது இதல்ை தெள்ளிதின் விளங்கும்.

-

1. செந்தமிழ்ச் செல்வி-சிலம்பு. 47 பக். 809-10. திரு. வ. சுப்பையா பிள்ளை.

2. செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 47, பக். 311. திரு. வ. சுப்பையா பிள் ளே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/78&oldid=586341" இலிருந்து மீள்விக்கப்பட்டது