பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 67

மேலே குறிப்பிடப்பெற்ற நூல்கள் எல்லாம் இளைய மாணவர்க்ளேயும், எழுதப் படிக்கத் தொடங்கும் முதியோர்களை யும் மையமாகக்கொண்டு எழுதப்பெற்ற நூல்களாகும். எனி லும் அரிய கருத்துகள் அமைந்து கற்பாரை நல்வழிப் படுத்தத்தக்க ஆற்றல் உடையனவாய் விளங்கின. சொல்லழ கும் பொருளழகும் அமைந்த சிறுசிறு தொடர்களால் இனிமை யாக நடந்து செல்லும் உரைநடை அவர் நடை. மாணவர்க் கேற்ற பாடல்களும் சுவையூட்டுவனவாய் அமைந்தன. எளிதில் பாடுதற்கும், பொருள் புரிந்து கொள்ளுதற்கும் வாய்ப்பாக இருந்தன. குழந்தைகளுக்கென்று எழுதிய நூல்களில் எத்தகைய உயர்ந்த கருத்துகள் இடம்பெற்றிருந்தன என்ப தற்குச் சில சான்றுகள் காணலாம்.

‘என்னுடைய பெற்றாேர் எனக்குக் கண்கொடுக்காமல் பொருள் கொடுத்தார்கள். அறிவை வளர்க்காமல் உடம்பை வளர்த்தார்கள். அவர்கள்மேல் தப்பு இல்லை. அந்தக் காலமே அப்படித்தான்'-படிக்காதவன் ஒருவன் உரை இது.”

== * = *

‘நல்லவர் யாராக இருந்தாலும் அவர் வீட்டில் சாப்பிட லாம். சமைக்கும் இடமும் பாத்திரமும் சுத்தமாக இருத்தல் வேண்டும். அழு காத, கெடாத பொருளைச் சமைக்க வேண் டும். இப்படி நல்ல முறையில் சமையல் செய்திருந்தால் அது தான் நல்ல உணவு. வேறே ஒன்றும் நான் கவனிப்பதில்லை.? இது படித்த இளைஞன் ஒருவன் கூறும் சீர்திருத்த உரை.

“அத் தெருவில் வாழும் சிலருக்கு நாலைந்து முறை தந்திச் செய்திகள் வந்தபோது அவர் உடன் இருந்து அவற்றைப் பார்த்திருந்தார். அச் செய்திகள் இழவுச் செய்திகளாகவே இருந்தன. ஒருநாள் நல்லப்பருக்கே ஒரு தந்தி வந்தது. அதை அவர் கண்டவுடன் அழத் தொடங்கி விட்டார்.’ இஃதொரு நகைச்சுவைச் செய்தி.

1. கண்ணுடைய வாழ்வு பக். 3. 2. ைெடி 5–6. கி. படி யாதவர் படும்பாடு பக். 12.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/79&oldid=586342" இலிருந்து மீள்விக்கப்பட்டது