பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பெருந்தகை மு. வ.

“ உன் வயது என்ன ?’

‘என் வயது சரியாகச் சொல்ல முடியாது. போன தாது ஆண்டில் வந்த பஞ்சம் எனக்குத் தெரியும். அப்போது சிறு பையனுய் இருந்தேன். நீங்களே கணக்குப் போடுங்கள்.’

‘ஏறக்குறைய எழுபது இருக்குமா?’

இருக்கலாம் என்றுதான் எண்ணுகிறேன். என் வீட்டுக்காரி செத்துப்போய் பத்து வருடம் இருக்கும். அப் போது எனக்கு 62 வயது என்று பேசிக்கொண்டார்கள்’ --

-சிரிப்பு வெடிகள் இவை.

‘நம் தமிழ் நாடோ தூங்குகிறது. இன்னும் தூக்கமா? தமிழ் மக்கள் நிலையை உன்ன உன்ன உள்ளம் குழைகிறதே. உலகிற்குக் கலையறிவை ஊட்டிய தமிழ்மக்கள், உலகின் முதன் முதலில் எழுத்து வடிவம் பெற்ற மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்மக்கள், மொழிகள் பலவற்றுக்குத் தனிப் பெருந் தாயாய் இயங்கும் மொழியைப் பேசும் தமிழ்மக்கள், உலக மொழிகள் எல்லாவற்றையும் விட எழுதப்படிக்கக் கற்றல் எளிதாக உள்ள ஒரு மொழியைப் பயிலும் தமிழ்மக்கள் எழுத்தறிவும் இல்லாது வாழ்தல் தகுமோ? இந் நிலை ஒழிக. நன்னிலை எய்துக! தமிழ் மக்களே எழுங்கள் ! அனைவரும் முயலுங்கள் அறிவொளியைப் பரப்புங்கள் !’ - இஃது உணர்ச்சிமிக்க ஒரு நடை. இது மு. வ. நடையா? திரு.வி.க. நடையா? திரு. வி. க. நடையில் தோய்ந்த மு. வ.வின் எழில் நடை !

பேசு கிளியே பேசு கிளியே

பேதம் ஒன்றும் இல்லை என்று பேசு கிளியே’’’

கிளிக்குச் சொல்கிருரா? கிள்ளை வழியே பிள்ளைக்குச் சொல் கிருரா ? மனப்பறவை பறக்கும் வகையை மறக்க விடாமல் பாடு கிறார் மு.வ.

1. படியாதவர் படும்பாடு. 33.

2. FF 96.

3. குழங்தைப் பாட்டுக்கள். பக். 9.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/80&oldid=586344" இலிருந்து மீள்விக்கப்பட்டது