பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 69

  • குருவி பறக்கும் வீட்டின் மேல்

காக்கை பறக்கும் அதற்கு மேல் புருக்கள் பறக்கும் புதுமையாய் பருந்து பறக்கும் முகில் அருகே கப்பல் பறக்கும் அதைப்போலே காற்றில் பறக்கும் எல்லாமே எல்லாம் உயரப் பறந்தாலும் என்மனம் போலப் பறந்திடுமோ ?’ தென்னையைப் பார்க்கிருன் சிறுவன். தன்னையும் பார்க்கிருன். தன்னை வளர்க்கும் அன்னையையும் எண்ணுகிருன். தென்னை செய்யும் உதவியையும் எண்ணுகிருன் தனக்குக் கற்றுத் தரும் பாடத்தை உன்னுகிருன்.

தென்னை மரமே கேளாய்!

தென்னை மரமே கேளாய்! உன்னை வளர்த்தவர் அப்பா;

என்னை வளர்த்தவர் அம்மா, உனக்கும் வயது ஆறே;

எனக்கும் வயது ஆறே; நீவளர்ந்த உயரம்

நான் வளர வில்லை; நீகொடுப்பாய் இளநீர்

நான் கொடுப்ப தென்ன ? ஆலுைம் என்னை அன்பாய்

அன்னை வளர்த்தலைப் பாராய் !’ மு.வ. தொடக்க நாளிலேயே எழுதிய செய்திகள் இவை. ஆல்ை, அப்பொழுதே அவர் கையெழுத்து-அச்சிடுவதற்குத் தரும் கையெழுத்துப்படி-எப்படி இருக்கும்?

‘திரு. மு. வரதராசனர் எழுதித் தரும் கையெழுத்துப் படி களில் அடித்தல் திருத்தல் இரா. எழுத்துகளும் தனித்தனி யாக ஒன்று போலத் தெளிவாகவே இருக்கும். அவர் ஒரு நூலை

1. குழந்தைப் பாட்டுக்கள். பக். 18. 3. குழந்தைப் பாட்டுக்கள் பக். 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/81&oldid=586345" இலிருந்து மீள்விக்கப்பட்டது