பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பெருந்தகை மு. வ.

நூல்களை எழுதிக் குவித்தார். இதழ்களிலும், மலர்களிலும் கட்டுரைகள்.பல எழுதினர். அவற்றைத் தொகுத்தும் இணைத்தும் கட்டுரை நூல்களும் வெளியிட்டார். சில ஆண்டுகளுள் பல் வேறு பணிகளுக்கு இடையே, இத் துணை நூல்களை-அருமையும் பெருமையும் வாய்ந்த நூல்களை - ஒருவர் படைக்க முடியுமோ என்று திகைப்பும் வியப்பும் உறுவார்க்குப், படைத்துள்ளாரே மு. வ.’ என்பதே விடையாம். இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் :

கூர்த்த மூளையமைந்த மு. வ. தம் தனியா விருப்பத்தால் தேர்ந்தெடுத்துக் கொண்ட துறை இலக்கியத்துறை ஆகும். அதனைத் தொழில் துறையாக மட்டும் கொள்ளாமல் உயிரொடும் உணர்வொடும் ஒன்றிய வாழ்வுத் துறையாகவே கொண்டவர். ஆதலால் இலக்கியத்தைத் தம் வாழ்வாகக் கொண்டு ஆராய்ச் சியில் ஈடுபட்டவர் அருமணிக் குவைகளைக் கண்டெடுப்பதில் နိူင္တူ இல்லையே! அன்றியும் புலவர் பட்டத்திற்காகவும், ‘பி. ஓ. எல்; எம். ஒ. எல்; பிஎச். டி; முதலாய உயர்நிலைப் பட்டங்களைப் பெறுதற்காகவும், பல்கலைக் கழகப் பேரவை களிலும், இலக்கிய மாநாடுகளிலும் உரையாற்றுவதற்காகவும் இடையீடு இன்றி இலக்கிய இலக்கண நூற்கடலுள் புகுந்து புகுந்து முத்தும் பவழமும் அள்ளி அள்ளிக் கொணர்ந்தவர். மு. வ., இவ்வனைத்தும் தம்மொடும் அமைந்து கிடந்துவிடப் பொதுநல நாட்டமுடைய அறிவுச் செல்வர்கள் கருதுவது உண்டோ? அவ்வகையால், தாம் பெற்ற இன்பத்தைத் தமிழ்கூறு நல்லுலகமும் தாங்கி மகிழுமாறு விரும்பினர் மு. வ. அவ் விருப்பத்தால் எழுந்த நூல்கள், ‘பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலைப் பயந்த காமரு மணியும் தொடைபுணர்ந்து’ அமைத்தாற் போன்று அருநூல் அணிகலங்களாய் அன்னைத் தமிழுக்கு அழகுறுத்துகின்றன. தமிழ் நெஞ்சம்:

மு. வ. வின் தமிழ் நெஞ்சத்தில் இருந்து முதற்கண் வெளிப் பட்ட இலக்கிய ஆய்வுநூல் தமிழ் நெஞ்சமாகும். அது 1945 ஆம் ஆண்டில் வெளிப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/88&oldid=586352" இலிருந்து மீள்விக்கப்பட்டது