பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 77

பண்டைத் தமிழ்ப் புலவர்களின் வாழ்வினை அவர்கள் பாடிய புறப்பாடல்களைக் கொண்டு பல்வேறு கோணங்களில் ஆராயும். நூல் தமிழ் நெஞ்சமாகும். தமிழ் நெஞ்சம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இருமுறை பாடமாக வைக்கப் பெற்றது. இரண்டாம். முறை பாடமாக வைத்த தல்ை பெற்ற வருவாய் முழுமையும். செஞய்நகர் திரு. வி. க. உயர்நிலைப் பள்ளிக்குச் சேர வாய்ப். பளித்தது மு. வ. வின் தமிழ் நெஞ்சமாகும்.

இலக்கிய ஆய்வு நூல்கள் :

மு. வ. வின் பழந்தமிழ் இலக்கிய ஆய்வுகள் பல்வேறு நூல்களாகத் தொடர்ந்து வெளிப்பட்டன. அவற்றுள் ஒரே பாடலால் எழுந்தவை ஒவச் செய்தி'யும், ‘கொங்குதேர் வாழ்க்கை"யும். பாட்டும் தொகையும் முழுதுறத் தழுவி எழுந்தது “பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை. ஒரே பொருளால் அமைந்தது மணல் வீடு'; ஒரே கினையால் அமைந்தது ‘முல்லைத்தினை'; ஒரே துறையால் அமைந்தது. *புலவர் கண்ணிர்'; விருந்தாய் அமைந்தவை குறுந்தொகை விருந்து’, நற்றினை விருந்து’, ‘நெடுந்தொகை விருந்து.’ செல்வமாய் அமைந்தவை குறுந்தொகைச் செல்வம்’, நேற்றினைச் செல்வம், நெடுந்தொகைச் செல்வம்'; இலக்கிய ஆய்வாய் அமைந்தவை இலக்கிய ஆராய்ச்சி’, ‘இலக்கியத். திறன்’, இலக்கிய மரபு’. இலக்கியக் கட்டுரைத் தொகுப்பாய். அமைந்தவை இலக்கியக் காட்சிகள்’, ‘நடைவண்டி’. சிலம்பின் வழியாய் எழுந்தவை, “கண்ணகி’, ‘மாதவி’, ‘இளங்கோ வடிகள்’. திருக்குறள் வழியாய் எழுந்தவை, திருக்குறள் தெளிவுரை’, ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’, ‘குறள் காட்டும் காதலர்.” -

ஒவச் செய்தி :

வேலத்து ஒடையிலே உருவாகியது ஒவச் செய்தி. என்பதை முன்னரே அறிந்தோம். “அளிநிலை பொரு அது’ எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடலின் விளக்கமே ஒவச் செய்தி. 28 அடிகளால் அமைந்த அப் பாட்டின் விளக்கம் 179

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/89&oldid=945052" இலிருந்து மீள்விக்கப்பட்டது