பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

    • •urgošsn* மிகப்பெரிய கலை. அதில் தேர்தல் கடமை. வாழத் தெரிந்தவர்களாக விளங்குதலே சமுதாயத்திற்கு நாம் செய்யத்தக்க நல்ல தொண்டு; எப்படி எனின் நம்மைப்

பார்த்துப் பிறர் கற்குமாறு, நாம் ஒரு நூலாகப் பயன்படு வோம்’.

இவ்வாறு டாக்டர் மு. வ. அவர்கள் என் அருமை நண்பர் திரு. ஈ. ச. விசுவநாதன் அவர்களுக்கு 14-10-1959 இல் கடிதம் எழுதியுள்ளார்கள்.

இவ் வகையில் டாக்டர் மு. வ. அவர்கள் எளிய குடியில் பிறந்தார்கள்; உயரிய எண்ணங்கொண்டு எளிய வாழ்வு வாழ்ந் தார்கள். உழவர் மைந்தராகப் பிறந்த அவர்கள் படிப்படியே உயர்ந்து பல்கலைக் கழகத் துணைவேந்தராக விளங்கினர்கள். கல்லூரியில் பயில வாய்ப்பில்லாத அவர்கள் அமெரிக்க நாடும் அன்போடு அழைத்து ‘டி. லிட்’ பட்டம் வழங்கும் தகுதியினைப் பெற்றார்கள். இளமையில் யாப்பருங்கலக்காரிகை’ என்னும் நூலினை வாங்கிப் படிக்க இயலாத மு. வ. தம் வாழ்நாளில் எண் பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதித் தமிழ் கூறு நல் லுலகிற்குத் தலையாய தொண்டாற்றினர்கள். இந் நூற்றாண்டில் எழுத்துப் பணியால் பொருளும் புகழும் ஒருங்கே சேர்த்த தனிப் பெருந் தகவுடையோராய்த் திகழ்ந்தார்கள். தமிழுக்கு மு. வ.” என்று இரண்டே எழுத்துகளில் உரிமை பாராட்டி, அவர்களைத் தமிழகம் அன்போடும மதிப்போடும் அழைத்து மகிழ்ந்தது.

டாக்டர் மு. வரதராசனர் விழுமிய வாழ்வு வாழ்ந்தவர். “சான்றாண்மைக்கு ஆழி என விளங்கியவர்; ஊழிபெயரினும் தாம் பெயராக் குறிக்கோள் நெறியினர். அவர்தம் வாழ்வு பிறர்க்கு வழிகாட்டும் பெருமை மிக்கது. எனவே அவர்தம் வாழ்க்கை வரலாற்றினை நூலாக எழுத முற்பட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/9&oldid=586354" இலிருந்து மீள்விக்கப்பட்டது