பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 79

தொடர்பு இல்லை என்பதை நாடு அறியச் செய்தாள். தன் வயிற்றில் பிறந்த மணிமேகலையைத் தமிழகத்தின் தவச் செல்வி ஆக்கிள்ை . சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்குதல், அமுதசுரபி ஏந்திப் பசிப்பிணி தீர்த்தல் முதலிய அறப் பெருஞ் செயல்கள் செய்து தொண்டு ஆற்றி உலகப் பெருமாதரில் ஒருத்தியாக விளங்கிய மணிமேகலையைப் பெற்ற தாய் என்று உலகம் புகழுமாறு உயர் நிலை உற்றாள் மாதவி’ என்று மாதவி யாரின் மாண்புகளை அடுக் கடுக்காகக் கூறும் மணி மொழிகளைக் கேட்கும் நாம், மாதவி வாழ்க’ என நம்மை அறியாமலே வாழ்த் துகிருேம் அதே பொழுதில் மு. வ. வையும் சேர்த் தே வாழ்த்துகிருேம்.

கொங்குதேர் வாழ்க்கை :

தருமி பொற் கிழி பெறுவதற்கு இறைவன் உதவியதாகக் கற்பனை செய்வதற்கு இடமாக அமைந்தது கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் தொடக்கமுடைய குறுந்தொகை இரண் டாம் பாட்டு. அப் பாட்டு பற்றிக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பதினென்றாம் ஆண்டு விழாத் தலைமை ஏற்று (19-2-1949) மு. வ. ஆற்றிய சொற்பொழிவே, கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் நூலாயிற்று.

‘தட்ப வெப்பம் அளவுபட அமைந்து மரம் செடி கொடி களில் பூத்த மலர்கள் மணம் கமழ்ந்து விளங்குவதற்கு ஏற்ற வளமுடைய நாடு இது. தண்மை மிகுந்த நாடுகளில் மலரும் மலர்கள் மணம் நிரம் பாதனவாக உள்ளன. வெம்மை மிகுந்த நாடுகளில் மரம் செடிகொடிகள் தழைத்து மலர்தல் அரிதாக உள்ளது. தட்ப வெப்பம் அளவாக அமைந்த தமிழ் நாடோ, மணம் கமழும் மலர்கள் மிகுந்ததால் தும்பிகள் பாடிப் பறந்து வாழ்வதற்கு உகந்ததாய் உள்ளது. புறத்தே அமைந்த இச் சூழ்நிலை அகத்திலும் உள்ளது போலும். இந் நாட்டில் சோலை யெல்லாம் தும்பிகளின் இசை முழக்கம் சிறந்திருப்பதுபோலவே ஊரெல்லாம் மக்களின் இசை முழக்கமும் மிகுந்திருக்கிறது. மக்கள் வாழ்வெல்லாம் பாட்டாக உள்ளது’ என்று தமிழ் மண்ணின் மாண்பை வியந்து கூறும் மு. வ. ‘குற்றமுடையதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/91&oldid=586356" இலிருந்து மீள்விக்கப்பட்டது